ஐரோலி பாலம்

ஆள்கூறுகள்: 19°09′03″N 72°58′50″E / 19.1507°N 72.9805°E / 19.1507; 72.9805
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐரோலி பாலம்
Airoli Bridge
ऐरोली पूल
ஐரோலி பாலம் வானில் இருந்து தோற்றம்
ஆள்கூற்று19°09′03″N 72°58′50″E / 19.1507°N 72.9805°E / 19.1507; 72.9805
வாகன வகை/வழிகள்சாலைப் போக்குவரத்து
கடப்பதுதானே நுழைவிடம்
இடம்மூலுண்டு, மும்பை மற்றும் ஐரோலி, நவி மும்பை
அதிகாரபூர்வ பெயர்ஐரோலி பாலம்
பராமரிப்புமகாராட்டிர மாநில சாலை மேம்பாட்டு நிறுவனம்
Characteristics
வடிவமைப்புபலகம் மற்றும் உத்தரப் பாலம்
மொத்த நீளம்3,850 meters (12,630 ft)
அதிகூடிய தாவகலம்1,030 meters (3,379 ft)
தாவகல எண்ணிக்கை50 மீட்டரில் 19 நீட்டங்கள். இரன்டு முனை நீட்டங்கள் ஒவ்வொன்றும் 40 மீட்டர். இரண்டு நீட்டன்கள் கலப்பயண நீட்டங்கள்
History
Constructed byஆப்கான் உள்கட்டமைப்பு நிறுவனம் மற்றும் திட்ட இயக்குநர் சுபோத் வி கமாட்
கட்டத் தொடங்கிய நாள்சனவரி 1994
கட்டி முடித்த நாள்சனவரி 1999
Statistics
சுங்கம்கார்களுக்கு 35. இரு சக்கர வாகனங்களுக்கு இலவசம்.
மேற்கு நோக்கிய ஐரோலி பாலம் பின்புறத்தில் மூலுண்டு

ஐரோலி பாலம் (Airoli Bridge) என்பது இந்தியாவின் மும்பை பெருநகர பகுதியில் அமைந்துள்ள ஒரு பாலம் ஆகும். இப்பாலம் மும்பை மற்றும் நவி மும்பை பகுதிகளை நேரடிச் சாலை மூலம் இணைப்பதற்காக கட்டப்பட்ட பாலமாகும்[1]. இப்பாலத் திட்டம் ஆப்கான் உள்கட்டமைப்பு நிறுவனத்தைச் சார்ந்த சுபோத் வி கமாட் என்பவரால் கட்டப்பட்டது. 1.03 கிலோமீட்டர் நீளமுள்ள இப்பாலம் ஐரோலி மற்றும் தானே-பெலாபூர் பகுதிகளின் வளர்ச்சிக்கு வித்திட்டது. மும்பை மாநில சாலை மேம்பாட்டு நிறுவனம் இப்பாலத்தைப் பயன்படுத்த பாதை வரியை வசூலித்தது.[2]

ஒரு இணைப்புச் சாலை மூலமாக தானே பெலாபூர் சாலை மற்றும் கிழக்கத்திய விரைவு நெடுஞ்சாலை ஆகியனவற்றை இப்பாலம் இணைக்கிறது. இந்தப் பாலம், தானே-பெலாபூர் சாலையை ஐரோலியில் ஒரு சந்திப்பால் இணைக்கிறது. மற்றும் கிழக்கு விரைவு நெடுஞ்சாலையை குறுக்கிலும், கோரேகாவ்-முலுண்டு இணைப்புச் சாலையை மும்பையிலும் சந்திக்கிறது. வசி நகரியக் குடியிருப்பையும் மாங்குர்து பகுதியையும் இணைக்கும் வசி பாலத்திற்கு அடுத்தாதாக, ஐரோலி பாலம் மும்பையையும் நவி மும்பையையும் இணைக்கின்ற இரண்டாவது பாலமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Airoli Bridge
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-09-30. பார்க்கப்பட்ட நாள் 2016-01-20.
  2. Shaikh, Ateeq (24 September 2014). "Mumbai: Pay nearly 17% more for toll from October 1". Daily News and Analysis (Mumbai). http://www.dnaindia.com/mumbai/report-mumbai-pay-nearly-17-more-for-toll-from-october-1-2021106. பார்த்த நாள்: May 15, 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரோலி_பாலம்&oldid=3546818" இலிருந்து மீள்விக்கப்பட்டது