குழி கழிவறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எளிமையான கழிவறையுடன் கூடிய தங்குமிடத்தின் வரைபடம்.[1]

குழி கழிவறை (pit latrine அல்லது pit toilet) என்பது தரையில் அமைக்கப்பட்டுள்ள துளையில் மனிதக் கழிவுகள் சேகரமாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கழிவறை ஆகும். அது தண்ணீரின்றி பயன்படுத்தும் வகையிலோ அல்லது ஒன்று முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பயன்படுத்தும் முறையிலோ அமைக்கப்பட்டிருக்கும்.[2] ஒழுங்காகக் கட்டப்பட்டுப் பராமரிக்கப்படும் போது, அவை திறந்த வெளியில் மலம் கழிப்பதைக் குறைத்து, மனித மலம் மூலம் பரவும் நோய்களைக் குறைக்க உதவும்.[3][4] இதனால் ஈக்கள் மூலம் மலத்திலிருந்து உணவுக்கு நோய்க்கிருமிகள் பரவுவது குறைகிறது.[3] இந்த நோய்க்கிருமிகள் தொற்று வயிற்றுப்போக்கு மற்றும் குடல் புழு நோய்கள் ஆகியவற்றுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.[4] தொற்று வயிற்றுப்போக்கால் 2011 ஆம் ஆண்டில் ஐந்து வயது வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 0.7 மில்லியன் பேர் இறந்தனர் மேலும் 250 மில்லியன் குழந்தைகள் பள்ளி நாட்களைத் தவறவிட்டனர்.[4][5] பொது இடத்தில் மலம் கழிப்பதைத் தடுப்பதற்கு குழி கழிவறைகள் செலவு குறைந்த முறையாகும்.[3]

குழிக் கழிவறை மூன்று முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது: தரையில் பள்ளம் தோண்டுதல், சிறிய துளையைக் கொண்ட பலகம் அல்லது தரை, சிறிய மறைப்பு (கட்டிடம்).[2] குழியானது பொதுவாக 3 மீட்டர் (10 அடி) ஆழம் மற்றும் 1 மீ (3.2 அடி) அகலம் கொண்டதாக இருக்கும்..[2] உலக சுகாதார அமைப்பானது, துர்நாற்றம் எளிதில் அணுக முடியாத அளவில் வீட்டிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் கழிவறையைக் கட்டுவதைப் பரிந்துரைக்கிறது.[3] தண்ணீர் மாசுபட்டைத் தவிர்ப்பதற்காக நிலத்தடி நீர் மற்றும் மேற்புற நீருக்கான இடைவெளி முடிந்தவரை அதிகமாக இருக்க வேண்டும். குழந்தைகள் குழியில் விழுவதைத் தவிர்ப்பதற்காக, பலகத்தில் உள்ள துளையானது 25 சென்டிமீட்டர்களுக்கும் (9.8 அங்குலம்) மிகாமல் இருக்க வேண்டும். ஈக்கள் மொய்ப்பதைத் தவிர்க்க, குழியினுள் வெளிச்சம் புகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக, கழிவறையைப் பயன்படுத்தாத போது, ஒரு மூடியால் துளையை மூடிவிட வேண்டும்.[3] குழியில் மேலிருந்து 0.5 மீட்டர் (1.6 அடி) வரை நிரம்பிவிட்டால், அதனைக் காலிசெய்ய வேண்டும் அல்லது, புதிய குழியை உருவாக்கி, மறைப்பை நகர்த்தவோ, மீண்டும் புதிய இடத்தில் கட்டவோ வேண்டும்.[6] குழியிலிருந்து மலக் கழிவை அகற்றுவது, சிக்கலானது. முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனில், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

அடிப்படையான குழிக் கழிவறையில் பல மாற்றங்களைச் செய்ய முடியும். அதில் ஒன்று கட்டமைப்புக்கு மேலே ஒரு காற்றோட்டக் குழாயை அமைப்பதாகும். இது காற்றோட்டத்தை அதிகரித்து, கழிவறையின் துர்நாற்றத்தைக் குறைக்கிறது. குழாயின் மேல் முனையை (பொதுவாக கண்ணாடியிழைப் பிளாஸ்ட்டிக்கு மூலம் செய்யப்பட்ட) வலை போன்ற அமைப்பினால் மூடும் போது ஈக்களின் பரவலும் தடுக்கப்படுகிறது. இந்த வகைக் கழிவறைகளில் குழியை மூடுவதற்கு மூடி எதுவும் தேவையில்லை.[6] தரையை அமைத்து நீர் எளிதாக வெளியேறுமாறு செய்வதும், குழியின் உறுதித்தன்மையை அதிகரிக்க செங்கற்கள் அல்லது சிமென்ட் உறைகளால் அதன் மேற்புறத்தை அமைப்பதும் இதன் பிற மேம்பாடுகளாகும்.[2][6]

2013 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 1.77 பில்லியன் மக்கள் குழி கழிவறையைப் பயன்படுத்துகின்றனர்.[7] இது பெரும்பாலும் வளரும் பிராந்தியப் பகுதிகளுடன், நாட்டுப்புறம் மற்றும் அடர்ந்த காட்டு பகுதிகளில் அதிகம் கட்டப்படுகிறது. 2011 ஆம் ஆண்டின் கணக்கின் படி, சுமார் 2.5 பில்லியன் மக்களுக்கு சரியான கழிவறை வசதி கிடைக்கவில்லை, ஒரு பில்லியன் மக்கள் திறந்த வெளி கழிப்பிடங்களைப் பயன்படுத்துகின்றனர்.[8] தெற்காசியா மற்றும் கிராமப்புற சகாரா ஆப்பிரிக்கப் பகுதிகளில் மிக மிகக் குறைவான அளவில் கழிவறைகள் உள்ளன.[8] வளரும் நாடுகளில் ஒரு எளிய குழி கழிப்பறையைக் கட்டுவதற்கான செலவு பொதுவாக 25 முதல் 60 அமெரிக்க டாலர் ஆகும்.[9] பெரும்பாலும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத பராமரிப்புச் செலவுகள் ஆண்டு ஒன்றுக்கு 1.5 மற்றும் 4 அமெரிக்க டாலர்களுக்கு இடையே உள்ளது.[10] இந்தியாவின் சில கிராமப்புற பகுதிகளில், கழிவறை இல்லாத வீட்டிற்கு மணமகளாக பெண்கள் செல்லக்கூடாது என்பதை ஊக்குவிக்கும் வகையில், கழிவறைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி "கழிவறை இல்லையெனில், கல்யாணம் பண்ணாதே" என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.[11][12]

மேற்குறிப்புகள்[தொகு]

  1. WEDC. Latrine slabs: an engineer’s guide, WEDC Guide 005. Water, Engineering and Development Centre The John Pickford Building School of Civil and Building Engineering Loughborough University. பக். 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978 1 84380 143 6. http://wedc.lboro.ac.uk/resources/booklets/G005-Latrine-slabs-on-line.pdf. 
  2. 2.0 2.1 2.2 2.3 Tilley, E., Ulrich, L., Lüthi, C., Reymond, Ph. and Zurbrügg, C. (2014). Compendium of Sanitation Systems and Technologies (2 ). Dübendorf, Switzerland: Swiss Federal Institute of Aquatic Science and Technology (Eawag). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783906484570. http://www.sandec.ch/compendium. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Simple pit latrine (fact sheet 3.4)". who.int. 1996. Archived from the original on 19 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 15 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 4.2 "Call to action on sanitation" (pdf). United Nations. பார்க்கப்பட்ட நாள் 15 August 2014.
  5. Walker, CL; Rudan, I; Liu, L; Nair, H; Theodoratou, E; Bhutta, ZA; O'Brien, KL; Campbell, H et al. (Apr 20, 2013). "Global burden of childhood pneumonia and diarrhoea.". Lancet 381 (9875): 1405–16. doi:10.1016/s0140-6736(13)60222-6. பப்மெட்:23582727. 
  6. 6.0 6.1 6.2 François Brikké (2003). Linking technology choice with operation and maintenance in the context of community water supply and sanitation. World Health Organization. பக். 108. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9241562153. http://whqlibdoc.who.int/publications/2003/9241562153.pdf. 
  7. Graham, JP; Polizzotto, ML (May 2013). "Pit latrines and their impacts on groundwater quality: a systematic review.". Environmental health perspectives 121 (5): 521–30. doi:10.1289/ehp.1206028. பப்மெட்:23518813. 
  8. 8.0 8.1 (pdf) Progress on sanitation and drinking-water - 2014 update.. WHO. 2014. பக். 16–20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789241507240 இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303171208/http://www.unicef.org/publications/files/JMP_report_2014_webEng.pdf. பார்த்த நாள்: 2015-10-24. 
  9. Selendy, Janine M. H. (2011). Water and sanitation-related diseases and the environment challenges, interventions, and preventive measures. Hoboken, N.J.: Wiley-Blackwell. பக். 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781118148600. http://books.google.ca/books?id=nZlS4ZfUOZUC&pg=PA25. 
  10. Sanitation and Hygiene in Africa Where Do We Stand?. Intl Water Assn. 2013. பக். 161. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781780405414. http://books.google.ca/books?id=_CkDAwAAQBAJ&pg=PA161. 
  11. Global Problems, Smart Solutions: Costs and Benefits. Cambridge University Press. 2013. பக். 623. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781107435247. http://books.google.ca/books?id=g9tRAgAAQBAJ&pg=PA623. 
  12. Stopnitzky, Yaniv (12 December 2011). "Haryana's scarce women tell potential suitors: "No loo, no I do"". Development Impact. Blog of World Bank. பார்க்கப்பட்ட நாள் 17 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழி_கழிவறை&oldid=3550846" இலிருந்து மீள்விக்கப்பட்டது