பேச்சு:முடிவுடன்-முடிவிணை நெறிமுறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருத்தமான தலைப்பினை வழங்குமாறு தமிழறிஞர்களை (தகவலுழவன், செம்மல் ஐயா) வேண்டுகிறேன்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:58, 30 ஏப்ரல் 2015 (UTC)

இங்கு நடந்த உரையாடலை கீழே ஒட்டியுள்ளேன்: --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:32, 2 மே 2015 (UTC)[பதிலளி]

வணக்கம்! முடிக்கு-முடி கொள்கை எனும் தலைப்பு சரிவரப் பொருந்தவில்லை; உரிய கலைச்சொல்லினை வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:41, 1 மே 2015 (UTC)[பதிலளி]

principle-நெறிமுறை; End to End என்ற சொற்றொடரை முடிவுடன் முடிவிணை எனலாம். எனவே தங்கள் தலைப்பை முடிவுடன் முடிவிணை நெறிமுறை எனலாம்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 03:30, 2 மே 2015 (UTC)[பதிலளி]
Theory-கோட்பாடு எனவும் Policy-கொள்கை எனவும் நான் பயன்படுத்துகிறேன். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 03:34, 2 மே 2015 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு நன்றி!!

நான் (கலைவாணன்) முயற்சித்த வேறு பெயர்கள்: (முன்னுரிமை அடிப்படையில்)

  • 'முனையம் முதல் முனையம் வரை' - 'முனையம்' என்பது 'Terminal' என்பதன் பெயர்ப்பு. அதனால் இங்கு பொருந்துமா என்ற ஐயம் காரணமாக தவிர்த்துவிட்டேன்.
  • 'முனைக்கு முனை' - ஆனால் 'முனை' என்ற சொல் 'node' என்ற பதத்திற்குப் பொருத்தமானது; 'End to End' என்பது 'End node to End node' என்பதையே குறிப்பதால் 'முனை' என்ற சொல் 'End node'-ஐச் சரியாக பெயர்க்கவில்லை.
  • 'ஆதி முதல் அந்தம் வரை' - இத்தொடர் ஒரு ஒழுங்கை/வரிசையைக் குறிப்பதாக உணர்ந்தேன் - இது 'End to End'-இல் குறிக்கப்படும் நெகிழ்வான பிணைய பரிமாற்றத்திற்கு மாறாக இருப்பதாக உணர்ந்தபடியால் இதனையும் தவிர்த்தேன்.

உலோ.செந்தமிழ்க்கோதை அவர்கள் வழங்கிய principle-நெறிமுறை/நெறி என்ற மொழியாக்கம் இங்கு பொருத்தமானதெனக் கருதுகிறேன். அவர்களுக்கு எனது நன்றிகள்!! அவர்கள் அளித்த 'முடிவுடன் முடிவிணை' என்ற மொழியாக்கம் முழு நிறைவாக இல்லாதது போல் உணருகிறேன். அதிலிருந்து சற்று மாற்றியமைத்த 'முடிவுடன் முடிவையிணை' என்ற சொற்றொடர் பொருந்துமா என அறிய விரும்புகிறேன். --Kalaivanan S (பேச்சு) 08:47, 4 மே 2015 (UTC)[பதிலளி]