மதராஸ் டு பாண்டிச்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதராஸ் டு பாண்டிச்சேரி
இயக்கம்திருமலை மகாலிங்கம்
தயாரிப்புடி. எஸ். ஆதிநாராயணன்
பி. எம். நாச்சிமுத்து
எஸ். சிவராமன்
ஜி. கே. செல்வராஜ்
கதை"உசிலை" சோமநாதன்
இசைடி. கே. ராமமூர்த்தி
நடிப்புரவிச்சந்திரன்
கல்பனா
ஒளிப்பதிவுஜி. விட்டல் ராவ்[1]
படத்தொகுப்புஏ. பால் துரைசிங்கம்[1]
வெளியீடுதிசம்பர் 16, 1966
நீளம்3566 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மதராஸ் டு பாண்டிச்சேரி(Madras to Pondicherry) 1966 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், கல்பனா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப் படத்திற்கு உசிலை சோமநாதன் திரைக்கதை எழுதியுள்ளார். வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்ற இப் படம்இந்தியில் "பாம்பே டு கோவா"(1972) என்ற பெயரில் எடுக்கப்பட்டது.[2] அதைத்தொடர்ந்து 2004இல் மராத்தி மொழியில் "நவ்ரா மழ நவ்சச்சா" என்கிற பெயரிலும், 2007இல் கன்னடம் மொழியில் "ஏகதந்தா" என்கிற பெயரிலும் எடுக்கப்பட்டது.[3]

கதை[தொகு]

மாலா, திரைப்பட நடிகை ஆகும் ஆர்வத்தில் தன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இதைக் கண்ட குண்டர்கள் குழு ஒன்று அவளைத் துரத்தியது. மோதலில் குழுவிலிருந்த ஒருவன் சுடப்பட்டான். இதை மாலா பார்த்துவிட்டதால் அக்குழு அவளைத் துரத்தியது. அவர்களிடமிருந்து தப்பிக்க மாலா மதராஸிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் பேருந்தில் ஏறிக்கொள்கிறாள். குண்டர்கள் குழுவும் அந்தப் பேருந்தில் ஏறி அவளைக் கொல்வதற்காக காத்திருந்தனர். பாஸ்கர் என்ற இளைஞனும் அப் பேருந்தில் ஏறுகிறான். மாலாவின் ஆபத்தை உணர்ந்துகொண்டு அவளைக் காப்பாற்றுகிறான். அவளிடம் காதல் கொள்கிறான். முடிவில் பாஸ்கரும் மாலாவும் இணைந்தனரா என்பதுடன் கதை முடிவுக்கு வருகிறது.

நடிப்பு[தொகு]

மாலா - கல்பனா(கன்னட நடிகை)[4]
பாஸ்கர் - ரவிச்சந்திரன்[4]
பேருந்து நடத்துனர் - நாகேஷ்[4]
பிராமணர் பெண்மணி - மனோரமா[4]
பேருந்து ஓட்டுநர் - ஏ. கருணாநிதி[4]
பிராமண தம்பதியின் மகன் - "பக்கோடா" காதர்[4]
பிராமண மனிதன் - ஏ. வீரப்பன்[4]

தயாரிப்பு[தொகு]

"மதராஸ் டு பாண்டிச்சேரி"திருமலை மகாலிங்கம் இயக்கத்தில், உசிலை சோமநாதன் திரைக்கதையில் வெளிவந்த திரைப்படமாகும்.[4] இப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிடோன் சார்பில் டி. எஸ். ஆதிநாராயணன், பி. எம். நாச்சிமுத்து, எஸ். சிவராமன் மற்றும் ஜி. கே. செல்வராஜ் தயாரித்துள்ளனர்.[1] இது சாலையில் ஓடும் பேருந்தில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ஆகும்.[5]

பாடல்கள்[தொகு]

இப் படத்திற்கு இசை அமைத்தவர் டி. கே. ராமமூர்த்தி, பாடல்களை ஆலங்குடி சோமு, பஞ்சு அருணாசலம், தஞ்சை வாணன்,மற்றும் நாகக்கல் வரதராஜன் எழுதியுள்ளனர்.[4][6]

எண். பாடல் பாடியோர் காலம்
1 "என்ன எந்தன்" டி. எம். சௌந்தரராஜன் பி. சுசீலா 4:05
2 "எங்கே பயணம்" 4:07
3 "மலர் போன்ற பருவமே" டி. எம். சௌந்தரராஜன் 3:18
4 "ஹலோ மை ஃப்ரெண்ட் நெஞ்சத்தில் என்ன" பி. சுசீலா 3:26

வெளியீடு மற்றும் வரவேற்பு[தொகு]

"மதராஸ் டு பாண்டிச்சேரி" திசம்பர் 16, 1966இல் வெளியிடப்பட்டது.[7] திரைப்பட வரலாற்றாளர் ராண்டார் கை இப் படத்தின் அருமையான திரைக்கதை, மனதை தொடும் இசை, மற்றும் நடிகர்கள் நாகேஷ், மனோரமா, கல்பனா, ரவிச்சந்திரன், பக்கோடா காதர் போன்றோரின் நடிப்புத் திறனில் வெளிப்படும் நகைச்சுவை என்றும் நினைவிலிருக்கும் என்று தனது விமரிசனத்தில் குறிப்பிட்டுள்ளார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Madras To Pondicherry (motion picture). Sri Venkateswara Cinetone. 1966. Opening credits, from 0:00 to 3:24.
  2. https://www.thehindu.com/features/cinema/Madras-To-Pondicherry-1966/article12572848.ece
  3. http://archive.indianexpress.com/news/the-remake-saga/1073397/1
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 Randor Guy (29 September 2012). "Madras To Pondicherry 1966". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/Madras-To-Pondicherry-1966/article12572848.ece. 
  5. Anantharam, Chitradeepa (2 December 2017). "The French film city". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/the-french-film-city/article21245999.ece. 
  6. "Madras to Pondichery". AllMusic. பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.
  7. Film News Anandan (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [Tamil film history and its achievements] (in Tamil). Chennai: Sivagami Publishers. Archived from the original on 23 May 2018. பார்க்கப்பட்ட நாள் 5 பிப்ரவரி 2019. {{cite book}}: Check date values in: |access-date= (help); More than one of |archivedate= and |archive-date= specified (help); More than one of |archiveurl= and |archive-url= specified (help); Unknown parameter |dead-url= ignored (help)CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதராஸ்_டு_பாண்டிச்சேரி&oldid=3949280" இலிருந்து மீள்விக்கப்பட்டது