தேனுகா (எழுத்தாளர்)
இது தேனுகா எழுத்தாளரைப் பற்றிய கட்டுரை . தேனுகா இராகம் குறித்து படிக்க தேனுகா (இராகம்)
தேனுகா | |
---|---|
பிறப்பு | மு. சீனிவாசன் சனவரி 19, 1950 சுவாமிமலை, தமிழ்நாடு |
இறப்பு | கும்பகோணம் | அக்டோபர் 24, 2014
தேசியம் | இந்தியர் |
பணி | வங்கி ஊழியர் |
அறியப்படுவது | கலை, இலக்கிய விமரிசகர் |
தேனுகா என்றழைக்கப்படும் மு. சீனிவாசன் (பிறப்பு: சனவரி 19, 1950 - இறப்பு: அக்டோபர் 24, 2014)[1] தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் கலை விமர்சகர் ஆவார். கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் இசை, ஓவியம், சிற்பம், வரலாறு என்ற பல துறைகளில் பரிணமித்தவர். இந்திய அரசு வங்கியில் (State Bank of India) பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
தமிழ்நாடு, சுவாமிமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சீனிவாசன் நாதசுவரக் கலைக்குடும்பத்தில் பிறந்தவர். தந்தை சுவாமிமலை முருகையன் கோவிலில் நாதசுவரம் வாசிப்பவர். தந்தை வாசிக்கும் போது சீனிவாசன் தாளம் போடுவார்.[2]
சிறப்புகள்[தொகு]
- நெதர்லாந்து கட்டிடக்கலைஞர் ரீட்வெல்ட் வடித்த சிவப்பு-நீல வண்ண நாற்காலியைப் போன்று இவரே வடிவமைத்தார்.
- தமிழில் நுண்கலைகள் பற்றி அழகியல் கண்ணோட்டத்துடன் விமரிசனம் வைத்த முன்னோடி.[3]
நூல்கள்[தொகு]
- வித்யாஷங்கர் ஸ்தபதியின் சிற்ப மொழி (1987)
- மைக்கேலேஞ்சலோ (1991)
- லியனார்டோ டாவின்சி (1991)
- புது சிற்பவியல் : பியாத் மாந்திரியானின் நியோபிளாஸ்டிசிஸம், ஓவியர் வான்கோ (1996)
- பழகத் தெரியவேணும் (1997) [4]
- பியாத் மாந்திரியான் (2007)
- தோற்றம் பின்னுள்ள உண்மைகள் தேனுகாவின் கலை இலக்கியப் படைப்புகள் [5]
கட்டுரைகள்[தொகு]
- டாக்சிடெர்மிஸ்டுகள் தேவை” (1984)
- வண்ணங்கள் வடிவங்கள் (1987 வெளியான கட்டுரைத் தொகுப்பு தமிழ்நாடு அரசின் சிறந்த கவின்கலை விருதுபெற்றது )[3]
விருதுகள்[தொகு]
- மாநில லலித கலா அகாதெமியின் கலைச்செம்மல் விருது
- இந்திய அரசின் ஷபெல்லோஷிப் விருது
- சிறந்த தமிழறிஞருக்கான தமிழக அரசு விருது
- ஸ்டேட் வங்கி இலக்கிய விருது
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "கலை இலக்கிய விமர்சகர் தேனுகா காலமானார்". தினமணி. 25 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2014.
- ↑ "புகழைத் தேடி அலையும் கலைஞர்களுக்கு படைப்புத் திறன் நின்றுவிடும்(Creative menopausity)! - தேனுகா நேர்காணல்". பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2014.
- ↑ 3.0 3.1 "அஞ்சலி: தேனுகா". புத்தகம் பேசுது. பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ [1]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-03-29. பார்க்கப்பட்ட நாள் 2014-09-30.
வெளியிணைப்புகள்[தொகு]
- தேனுகா கலைப் பக்கங்கள்
- தேனுகாவின் பக்கங்கள்
- மைக்கேலேஞ்சலோ மற்றும் லியனார்டோ டாவின்சி வண்ணங்கள் வடிவங்கள் பரணிடப்பட்டது 2014-08-23 at the வந்தவழி இயந்திரம்
- ஆதிமூலத்தின் அரூப ஓவியங்கள் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- Championing a cause, The Hindu, Friday Review, Chennai, December 20, 2012
- Modern twist,The Hindu, Friday Review, Chennai, November 14, 2013
- காலம் அள்ளிக்கொண்ட கலா ரசிகர்!, தி இந்து, 26.10.2014