சுரநிமல

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உருகுணை இராச்சியத்திலுள்ள கொத்திவாலா வட்டாரத்தின், கந்தக வித்திக என்ற கிராமத்தின் குலத் தலைவனாக சங்கன் என்றொருவன் இருந்தான். அவனுக்கு ஏழு பிள்ளைகள் இருந்தார்கள். அவனது ஏழாவது பிள்ளையான "நிமலன்/நிமல" 10 யானைகளின் பலம் பொருந்தியவன்.

உருகுணை இராட்சியத்திலிருந்து ஒரு அழைப்பு[தொகு]

சுரநிமலன் / சுர நிமல

உருஹுனையின் மன்னனான காவன்தீசனின் இன்னொரு மனைவி மூலம் பிறந்த மகன் தீக அபயன். இவனுக்கு காவன்தீசன் மகாவலி கங்கையைத்தாண்டி தமிழர்கள் வராமல் தடுக்க கச்சக பாலத்தின் அருகே காவல் காக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படைத்தான். இதற்காக உருகுணை இராட்சியத்தில் இருந்து இரண்டு ஜோயனை தூரத்துக்குக்குள் வாசிக்கும் ஒவ்வொரு பிரபுக்குடும்பங்களிலிருந்தும் ஒவ்வொருவர் காவலுக்கு வர வேண்டுமென தீக அபயன் ஏற்பாடு செய்திருந்தான்.

இவ்வழைப்பிதழ்  சங்கன் என்ற பிரபுக்குடும்பத்திட்கும் வந்தடைந்தது. அதில் ஒரு பிள்ளையை அனுப்ப வேண்டுமென இளவரசன் அபயன் கூறியிருந்தான்.

இளவரசனுடனான சந்திப்பு[தொகு]

நிமலனின் சோம்பேறித்தனத்தைகண்டு கோபம் கொண்டிருந்த அவனது ஆறு சகோதரர்களும் காவலுக்கு இவன் போகவேண்டுமென்று விரும்பினர். ஆனால் இவனுடைய தாயும் தந்தையும் அவ்வாறு விரும்பவில்லை. மற்ற சகோதரர்களிடம் கோபம் கொண்டவனாக அவன் அதிகாலையில் 3 யோயனை தூரம் சென்று சூரிய உதயத்துக்கு முன்பே இளவரசனைக் கண்டான்.

தீக அபயன் இளவரசனின் சோதனை[தொகு]

இளவரசன் இவனை சோதிப்பதற்காக வெகுதூரம் போக வேண்டிய வேலை ஒன்றைக் கொடுத்தான்.

சேத்திய மலைக்கு அருகே துவார மண்டல கிராமத்தில் என்னுடைய நண்பனான குண்டலி என்ற பிராமணன் இருக்கிறன். அவனிடம் வெளிநாட்டிலிருந்து வந்த பொருள்கள் உள்ளன. அவனிடம் சென்று அவன் கொடுக்கும் பொருட்களைக்கொண்டுவா! என்று சொல்லி உணவளித்த பின்பு ஒரு லிகிதத்துடன் அவனை அனுப்பி வைத்தான்.

அனுராதபுரத்தை நோக்கி 9 யோயனை தூரம் நடந்து மதியானத்துக்குள் அவன் பிராமணன் இருக்குமிடத்தை அடைந்து விட்டான்.

பிராமணனின் முடிவு[தொகு]

"குளத்தில் குளித்துவிட்டு பிறகு என்னிடம் வா!" என்றான் பிராமணன். அதற்கு முன் அனுராதபுரத்திட்கு வந்திராத "நிமலன்" தீஸவாவிக்கு சென்று குளித்துவிட்டு தூபராமவிலுள்ள விஹாரைக்கும், புனித போதி மரத்துக்கும் வணக்கம் செய்துவிட்டு நகரிட்க்குள் சென்றான்.

நகரை சுற்றிபார்த்துவிட்டு, வாசனை திரவியங்களையும் வாங்கிக்கொண்டதும் வடக்கு வாசல் வழியே சென்று தாமரை மலர்களை வாங்கிக்கொண்டு பிரமணனிடம் வந்தான். பிராமணன் நடந்தவற்றை கேட்டுஅறிந்தான். காலையில் நடந்து வந்ததையும் இப்போது நடந்துபோய்விட்டு வந்ததையும் கேள்விப்பட்டு வியப்பிலாழ்ந்தான். ஏனெனில்  உணவேதும் உட்கொள்ளாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் அவன் விரைவாக வந்தமையால் பிராமணன் வியப்படைந்தான்.

எனவே இவன் தமிழர்களுக்கு அருகில் வாசிக்ககூடாதென்று கருதி உணவு மற்றும் புன்னவதன உடைகளையும் மற்றும் பல பொருட்களையும் அளித்து இளவரசனிடம் அனுப்பிவைத்தான். மாலை மங்கு முன் இளவரசனிடம் வந்து சேர்ந்தான். பிராமணன் கொடுத்த லிகிதத்தையும் மற்றைய பொருட்களையும் இளவரசனிடம் கொடுத்த போது அவன் மனமகிழ்ந்து பரிசளித்து கௌரவிதான்.

காவன் தீசனிடத்தில்[தொகு]

இராஜரட்டை / அநுராதபுர இராட்சியம்

பரிசுப்பொருட்களை பெற்றோரிடத்தில் ஒப்படைத்துவிட்டு தீக அபயன், இளவரசனிடம் சென்ற போது நிமலவை காவன்தீசனிடம் அனுப்பி வைத்தான். காவன்தீசன் அவனை துட்டகைமுனுவிடம் சேவை செய்ய அனுப்பிவைத்தான்.

யுத்தம்[தொகு]

பிற்காலத்தில் நடந்த காமினி (துட்டகைமுனு) – எல்லாளன் போரின்போது காமினி சார்பாக போரிட்டான்.

இவ்யுத்தத்தில் எல்லாளனின் விஜிதபுரம் கோட்டையை கைப்பற்றுவதட்கு பெரும் பங்காற்றினான். நந்தி மித்திரன் மற்றும் அவனுடைய யானையுடன் சேர்ந்து நிமலனும் கோட்டையின் தெற்குப்புறத்தை தாக்கினார்கள்.

எல்லாளனின் தளபதி "தீகஜந்து" காமினியை கொல்லமுற்பட்டபோது இவனே துட்டகைமுனுவைய்க்காப்பாற்றினான்.

ஆதாரங்கள்[தொகு]

[1]

[2]

  1. "துட்டகைமுனுவின் வரலாறு".
  2. https://noolaham.net/project/47/4622/4622.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரநிமல&oldid=3714454" இலிருந்து மீள்விக்கப்பட்டது