நந்தி மித்ர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நந்தி மித்ர காவன்தீசனின் பத்துத் தளபதிகளில் ஒருவனாவான்.இவன் உடல் வலிமையாலேயே முக்கியத்துவம் பெறுகின்றான்.

இளமைக்காலம்[தொகு]

அனுராதபுரத்தை ஆட்சி செய்த எல்லாளனின் கீழ் மித்ர என்ற சிங்கள சேனாதிபதி இருந்தான். அவனது தங்கையின் மகனே நந்தி மித்ரா ஆவான்.குழந்தைப் பருவத்தில் இவனை தோல் பட்டியால் திரிகைக் கல்லுடன் கட்டிவிட்டுச்செல்வர். இவன் அக்கல்லை இழுத்துக் கொண்டு அங்கும்இங்கும் தவழ்ந்து செல்வான். ஒரு நாள் வீட்டிற்கு அருகிலிருந்த மூங்கில் மரத்தில் கட்டப்பட்ட சந்தர்ப்பத்தில் அதையும் இவன் கழற்றிவிட்டான்.

பெயர் வந்த காரணம்[தொகு]

இவனது மாமாவின் பெயரால் மித்ர என்று அறிமுகமானதுடன்,இடுப்பில் தோல் பட்டியால் கட்டப்பட்டதால் நந்திமித்ர எனப்பட்டான்.

பணி,சிறப்பு[தொகு]

பிற்காலத்தில் இவன் காவன்தீசனின் படையில் சேர்க்கப்பட்டான்.துட்டகைமுனு, எல்லாளன் யுத்தத்தில் பெரும் பணியாற்றினான்.அரசன் பலத்தை பரிசோதிக்க அனுப்பிய யானையையும் தந்தங்களைப் பிடித்து அடக்கினான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தி_மித்ர&oldid=1515010" இருந்து மீள்விக்கப்பட்டது