சுற்றுலாத் துறை அமைச்சகம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுற்றுலாத் துறை அமைச்சகம்
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைஇந்தியாஇந்தியக் குடியரசு
தலைமையகம்சுற்றுலாத்துறை அமைச்சகம்
போக்குவரத்து பவன்
சன்சத் மார்க்
புது தில்லி,110011
புது தில்லி
வலைத்தளம்tourism.gov.in

சுற்றுலாத் துறை அமைச்சகம் (Ministry of Tourism,India) இந்திய அமைச்சகங்களில் ஒன்றாகும். இந்திய சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு இன்றியமையாத விதிமுறைகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சட்டதிட்டங்கள் வடிவமைப்பது இந்த அமைச்சின் பொறுப்பு. நடப்பு சுற்றுலாத் துறை அமைச்சராக ஜி. கிஷன் ரெட்டி ஆவார்.[1] ஸ்ரீபாத் யசோ நாயக் மற்றும் அஜய் பட் இதன் இணை அமைச்சர்களாக உள்ளனர்.

இந்திய சுற்றுலாத் துறை, 2011ஆம் ஆண்டு, இலண்டனில் நடைபெற்ற உலக சுற்றுலாக் கண்காட்சியில் இரண்டு விருதுகள் வென்றதன் மூலம் உலகளவில் புகழ்பெற்றது. அவ்விரு விருதுகள், உலகின் முன்னணி பயண இலக்கு, உலகின் முன்னணி சுற்றுலா வாரியம் (Incredible India)முதலிய பிரிவுகளுக்காக வழங்கப்பட்டது[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. National Portal of India : Government : Who's Who
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-11. பார்க்கப்பட்ட நாள் 2013-11-24. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்[தொகு]