சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்
நூல் பெயர்:சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்
ஆசிரியர்(கள்):எஸ்.சூரியமூர்த்தி
வகை:ஆன்மீகம்
துறை:சித்தர்கள் வரலாறு
சித்தர்கள் குறிப்பு
சித்தர்களின் பட்டியல்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:206
பதிப்பகர்:நர்மதா பதிப்பகம்,
10 நானா தெரு,
பாண்டிபஜார்
தியாகராயர் நகர்,
சென்னை 600 017.
பதிப்பு:மு.பதிப்பு மார்ச் 2012

சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்[1] என்ற இந்நூல் சித்தர்களின் பாடல்களுக்கு ஒரு சிறு விளக்கம் தர முயற்சி செய்யும் நூல்.

நூலாசிரியர்[தொகு]

இந்நூலின் ஆசிரியர் எஸ்.சூரியமூர்த்தி இவர் மன அமைதியும் புத்தரின் விபாசனா தியானமுறையும் என்ற தியான முறை பற்றி மிக எளிமையாக எழுதி ஆன்மீ்கப் பணியாற்றுபவர்.

உட்பொதிவு[தொகு]

  1. முகவுரை
  2. இறைவனுக்கு அர்ப்பணம்
  3. ஒரு விளக்கம்
  4. பிராணாயாமம் செய்ய திருமூலர் காட்டிய வழி
  5. சித்தர்கள் என்போர் யாவர்
  6. சித்தர்களின் பட்டியல்,வரலாறு,சித்திபெற்ற இடங்கள்
  7. சித்தர்களின் குறிப்பு
  8. சித்தர்கள்
  9. சித்தர் மறை மொழிகள்
    சில விளக்கங்கள்

முகவுரை[தொகு]

வாழ்க்கையில் நம்முடைய பல பயங்களுக்கும்,துன்பங்களுக்கும் முக்கிய காரணம் நாம் வேறு, மற்றவர்கள் வேறு என்ற எண்ணமே ஆகும். மாறாக நாமே எல்லாவற்றிலும் கலந்து நிற்கிறோம் (அத்வைத நிலை) என்ற எண்ணம் நம் மனதில் ஏற்பட்டால் மரண பயம் நீங்கும் அதற்கு இந்நூலை படிக்க வேண்டும் என நூலாசிரியர் கூறி தொடங்குகிறார்.[1]

இறைவனுக்கு அர்ப்பணம்[தொகு]

யாகத்தில் இடப்பட்ட நிவேதியத்தை உண்ணுகிற இறைவனுக்கு அர்ப்பணிக்கத்தக்க பொருட்கள் நம்மிடமில்லை.காலையும் ,மாலையும் இறைவனைக் குளிர்விக்கும் சித்தர்களின் பாடல்களை நிவேதனமாகச் செய்வோம்.[1]

ஒரு விளக்கம்[தொகு]

சித்தர்களின் தியானமுறையினால்(வாசியோகம்) இன்று பல நோய்களுக்கு தீர்வு காணப்படுகிறது. இம்முறையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனுபவித்துச் சொன்னவர்கள் சித்தர்கள் அது மட்டுமன்றி இயற்கையில் கிடைத்த மூலிகைகளைக் கொண்டு மருத்துவம் செய்தார்கள். இம்மூலிகைகளுக்கு மறைமொழியில் அர்த்தங்கள் கூறினார்கள்,சித்தர்களின் பாடல்களை படிக்கும் போது நாத்திகவாதிகளாக எண்ணத் தோன்றும். சாதிகளையும்,சடங்குகளையும்,உருவ வழிபாடுகளையும் கடுமையாக சாடினார்கள். சித்தர்களின் தியானமுறையினால் (வாசியோகம்) நீண்ட நாள் உயிர் வாழும் கலையை இவ்வுலகிற்கு அர்ப்பணித்தார்கள். [1]

பிராணாயாமம் செய்ய திருமூலர் காட்டிய வழி[தொகு]

பிராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சி செய்ய உடல் சிவக்கும், உடலில் உள்ள முடி கருக்கும், உடலில் ஆன்மா நிலைத்து நிற்கும். அதாவது 16 மாத்திரை கால அளவு இடது பக்க நாசித்துவாரத்தில் (மூக்கு) உள்ளே இழுத்து (பூரகம்) 64 மாத்திரை கால அளவு உள்ளே காற்றை நிறுத்தி (கும்பகம்) 32 மாத்திரை காலளவு (ரேசகம்) மெதுவாக வலது நாசித்துவாரத்தின் (மூக்கு) வழியே வெளிவிட வேண்டும். [1]

சித்தர்கள் என்போர் யாவர்[தொகு]

சிவலோகத்தை இப்பூவுலகிலேயே கண்டு தரிசித்தவர்கள்,

சமாதி நிலையில் சிவ லோகத்தையும், சிவலோகத்தையும், சிவபோகத்தையும் தம் முள்ளே கண்டவரின் நிலையை எப்படி சொல்வது.

சித்தர்களின் பட்டியல்[தொகு]

சித்தர்கள் பதினெண்மர் (18 பேர்) என்பர்,

வரிசை எண் சித்தரின் பெயர் குரு சமாதி அடைந்த இடம் அருளிய நூல்கள்
1 அகத்தியர் சிவன் காசி மருத்துவம், தமிழ் இலக்கணம்
2 போகர் அகத்தியர் பழனி யோகம், காயகல்பம்
3 கோரக்கர் தத்தாத்ரேயர் போயூர்(வட இந்தியா) அவதூத கீதை
4 கயிலாச நாதர் --- ----- ----
5 சட்டைமுனி நந்தி, தட்சிணாமூர்த்தி ஸ்ரீரங்கம் 46 மருத்துவ நூல்கள்
6 திருமூலர் நந்தி திருவாவடுதுறை யோகம், தத்துவம்
7 நந்தி சிவன் காசி மருத்துவம், இரசவாதம்
8 கூன்கண்ணர் ---- ---- -----
9 கொங்கணர் போகர் திருப்பதி யோகம், தத்துவம்
10 மச்ச முனி போகர் திருப்பரங்குன்றம் யோகம், சம்பந்தப்பட்டது
11 வாசமுனி ---- ---- ----
12 கூர்ம முனி ---- ---- ----
13 கமலமுனி ---- திருவாரூர் ----
14 இடைக்காடர் போகர், கருவூரார் திருவண்ணாமலை காயகல்பம் சம்பந்தமானவை
15 புண்ணாக்கீசர் ---- ------ யோகம், தத்துவம்
16 சுந்தரானந்தர் போகர், சட்டைமுனி (கூடல்) மதுரை மருத்துவம் சம்பந்தமானவை
17 ரோமரிஷி ---- ----- ----
18 பிரம்மமுனி ---- ----- ----

இவர்களைத் தவிர கீழ் கண்டவர்களும் சித்தர்கள் என்றே குறிக்கப்படுகின்றனர்.

  1. தன்வந்திரி
  2. புலிப்பாணி (இவர் சீனத் தேசத்தவர் புலிப்பாணியின் சீடர்)
  3. காகபுசுண்டர்
  4. கருவூரார்
  5. இராம தேவர்
  6. தேரையர்
  7. கபிலர்
  8. சிவ வாக்கியர்
  9. காலாஞ்சி
  10. பாம்பாட்டி சித்தர்
  11. குதம்பைச் சித்தர்
  12. சட்டைமுனி
  13. பதஞ்சலி

சான்றாவணம்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்-நர்மதா பதிப்பகம்-சென்னை-2012