இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் முகாம்
இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் முகாம் என்பது இலங்கையில், இனப்பிரச்சினை காரணமாக இலங்கைத் தமிழர்களுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே நிகழ்ந்த ஈழப் போரில் இலங்கை ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதல்களால் நிராதரவான இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள்[1] இந்தியாவில் தஞ்சமடைந்தபோது அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க இந்திய அரசால் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு முகாம்களை குறிப்பதாகும்.
தமிழ்நாட்டில் மறுவாழ்வு உதவிகள்[தொகு]
தமிழ்நாட்டில் 115 முகாம்களில் 73,241 இலங்கை தமிழர்களும் (19,340 குடும்பத்தினர்) மற்றும் வெளி இடங்களில் 31,802 இலங்கை தமிழர்களும் (11,288 குடும்பத்தினர்) உள்ளனர்.[2]
தமிழ்நாட்டில் உள்ள முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்பு, குடிநீர், மின்சாரம், உணவுப்பொருட்கள், மாதாந்திர பணக் கொடை, திருமண உதவித் திட்டம், மற்றும் கல்வி [3]ஆகியன[4] [5][6]
தற்போதைய நிலை[தொகு]
தொழில்[தொகு]
முதியவர்கள் தென்னை கீற்று முடைதல் போன்ற சுயதொழில் மற்றும் கட்டுமானப்பணிகளிலும், இளைஞர்கள் நூற்பாலை மற்றும் விசைத்தறி ஆலைகளிலும் பணிசெய்து வருமானம் ஈட்டுகின்றனர். சுமார் 25 ஆண்டுகள் கடந்த முகாம்களில் உள்ள குடியிருப்புகள் சிதைந்து பாழடைந்த நிலையில் உள்ளது[7] இலங்கை தமிழர்கள் குடியிருப்புகளை சீரமைத்து, இந்திய குடியுரிமை கோருகின்றனர்[8]
தமிழக முகாமை விட்டு தப்பிச்செல்லுதல்[தொகு]
சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாகவும் தமிழக முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை கிடைக்காததால், அரசுப் பணி வாய்ப்பு உள்பட எந்த உதவியும் கிடைக்கவில்லை; எனவே தமிழக முகாமை விட்டு தப்பிச்செல்வதாக அகதிகள் தெரிவித்தனர். [9][10][11]
ஈழம் அகதிகள் மறுவாழ்வு அமைப்பு[தொகு]
தமிழ்நாட்டில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் என்ற அமைப்பை சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் மகன் செ. சந்திரகாசன் அமைத்து செயலாற்றி வருகின்றார்.
- ஈழம் அகதிகள் மறுவாழ்வு அமைப்பு இணையதளம் :http://www.oferr.org/content.php?id=181 பரணிடப்பட்டது 2013-03-06 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://dinamani.com/editorial_articles/article1052941.ece
- ↑ http://www.thehindu.com/news/national/rs-12-crore-for-now-to-improve-refugee-camps/article42156.ece
- ↑ http://dinamani.com/tamilnadu/article622157.ece
- ↑ http://dinamani.com/edition_vellore/article856353.ece
- ↑ http://www.thehindu.com/news/national/tamil-nadu/slew-of-measures-for-sri-lankan-refugees-in-camps/article3219698.ece
- ↑ http://www.deccanherald.com/content/291878/aiadmk-govt-construct-2500-houses.html
- ↑ http://www.thehindu.com/news/national/tamil-nadu/where-the-name-of-everyday-life-is-misery/article4065142.ece
- ↑ http://www.thehindu.com/news/national/tamil-nadu/sri-lankan-tamil-refugees-wish-for-indian-citizenship/article42734.ece
- ↑ http://dinamani.com/tamilnadu/article1534581.ece நடுக்கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் 120 பேர் மீட்பு தினமணி
- ↑ http://dinamani.com/editorial/article1535351.ece இன்னும் ஏன் அகதி முகாம்? தலையங்கம் தினமணி
- ↑ ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்று நடுக்கடலில் பலியாகும் அகதிகள் தினமலர்