ஒன்றன்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் இலக்கணம் பெயர்ச்சொற்களை உயர்திணை, அஃறிணை எனப் பகுத்துக்கொண்டுள்ளது. அஃறிணையை ஒன்றன்பால், பலவின்பால் என இரண்டாகக் கொள்கிறது.

  • அது, இது, உது, - சுட்டுப்பெயர் [1]
  • யாது - வினாப்பெயர் [2]
  • வந்தது, ஓடிற்று, குலைக்காந்தட்டு என்பன போல் து, று, டு என முடியும் வினைச்சொற்கள் ஒன்றன்பாலை உணர்த்தும். [3]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. தொல்காப்பியம் பெயரியல் 13
  2. தொல்காப்பியம் பெயரியல் 13
  3. தொல்காப்பியம் வினையியல் 20
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒன்றன்பால்&oldid=3845271" இலிருந்து மீள்விக்கப்பட்டது