பலவின்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் இலக்கணம் பெயர்ச்சொற்களை உயர்திணை, அஃறிணை எனப் பகுத்துக்கொண்டுள்ளது. எண்ணிக்கையைப் பொருத்து அஃறிணையை ஒன்றன்பால், பலவின்பால் என இரண்டாகக் கொள்கிறது.

 • அவை, இவை, உவை, - சுட்டுப்பொயர் [1]
 • யாவை - வினாப்பெயர் [2]
 • வந்தன, வாரா, வருவ என்பன போல் அ, ஆ, வ என முடியும் வினைச்சொற்கள் பலவின்பாலை உணர்த்தும். [3]
  • மான்கள், கற்கள் எனக் 'கள்' சேர்த்து எழுதப்படுவதை நன்னூல் குறிப்பிடுகிறது.
  • 'மான் மேய்ந்தன' என எழுதி வினைமுடிவால் பலவின்பாலை உணர்த்துவது மிகப்பழந் தமிழ்நடை.[4] அத்தகைய பெயர்களை பால்பகா அஃறிணைப் பெயர்கள் என்பர்.[5]

மேலும் மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, கோபம், இழிவு ஆகியவற்றைக் காட்டும் பொருட்டு எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே பால் மாறுவதை பால்வழுவமைதி கூறி ஏற்பர்.[6][7]

அடிக்குறிப்பு[தொகு]

 1. தொல்காப்பியம் பெயரியல் 13
 2. தொல்காப்பியம் பெயரியல் 13
 3. தொல்காப்பியம் வினையியல் 19
  • அகர முதல எழுத்து எல்லாம் - என்று தொடங்கும் திருக்குறளில் 'எழுத்து' என்னும் ஒருமை உணர்த்தும் சொல் 'எழுத்துக்கள் எல்லாம்' என்னும் பன்மைப் பொருளை உணர்த்தி 'முதல' என்னும் பன்மை முடிபு கொண்டுள்ளது. 'பகவன் முதற்று' என்னும் உயர்திணைத் தொடரில் ஒருமை ஒருமை-முடிபு கொண்டுள்ளது.
  • வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல (திருக்குறள் 1100) பன்மை
  • படிறு இல ஆம செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் (திருக்குறள் 91) - இதில் 'வாய்ச்சொல்' என்பது ஒருமை. 'இல' என்பது பன்மை.
 4. "பால்பகா அஃறிணைப் பெயர்கள்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் சனவரி 04, 2013.
 5. "பால்". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் சனவரி 03, 2013.
 6. "பால்வழுவமைதிக்கான காரணங்கள் யாவை?". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் சனவரி 03, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலவின்பால்&oldid=1562143" இருந்து மீள்விக்கப்பட்டது