பேச்சு:பூஞ்சை
நல்லபல கட்டுரைகள் உருவாவதைக் கண்டு மகிழ்ச்சி. எனினும் ஒரு ஐயம் - பன்மையில் பெயர் இருக்க வேண்டுமா? -- Sundar 04:54, 17 ஜூன் 2005 (UTC)
- இது குறித்து முன்பொருமுறை ஆலமரத்தடியில் விவாதித்தோம். அப்பொழுது பன்மையில் பெயர் வைப்பது சரி என அறிவுறுத்தபட்டது. அந்த கருத்து, விக்கிபீடியா பக்கங்களுக்கு பெயரிடுவது குறித்த வழிகாட்டு உதவிப் பக்கத்திலும் சேர்க்கப்பட்டது. எனினும், பாசிகள், ஆறு, மலை போன்ற சில தலைப்புகளுக்கு பெயரிடும் பொழுது பன்மையா ஒருமையா என்ற குழப்ப நிலை இருக்கிறது. ஆங்கில விக்கிபிடியாவின் இணைப்பக்கங்களில் பாசிகளுக்கு பன்மையிலும் பாக்க்டீரியாக்களுக்கும் பூஞ்சைகளுக்கும் ஒருமையிலும் பெயரிட்டிருக்கிறார்கள். இது குறித்து இன்னும் தெளிவான வழிகாட்டலை உதவிப் பக்கத்தில் சேர்க்கலாம்.--ரவி (பேச்சு) 10:16, 17 ஜூன் 2005 (UTC)
- அங்கும் பெயரிடல் மரபு தொடர்பான உரையாடல்களில் இன்னும் தெளிவு ஏற்படவில்லை. நான் அவ்வுரையாடல்களைக் கண்காணிக்கத் துவங்க வேண்டும். -- Sundar 10:35, 17 ஜூன் 2005 (UTC)