2022 தில்லி மாநகராட்சி தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2022 தில்லி மாநகராட்சி தேர்தல்

← 2017 4 டிசம்பர் 2022
 
கட்சி ஆஆக பா.ஜ.க காங்கிரசு
விழுக்காடு 42.05% 39.09% 11.68%



முந்தைய 2017 தேர்தல்களில் பெரும்பான்மை

வடக்கு தில்லி மாநகராட்சி - பாஜக
தெற்கு தில்லி மாநகராட்சி - பாஜக
கிழக்கு தில்லி மாநகராட்சி - பாஜக

2022 தேர்தலில் பெரும்பான்மை

ஆம் ஆத்மி கட்சி


தில்லி மாநகராட்சி தேர்தல், தில்லி மாநகராட்சியின் 250 வார்டு உறுப்பினர்களை நேரடித் தேர்தல் மூலம் வாக்காளர்கள் தேர்வு செய்ய 4 டிசம்பர் 2022 அன்று தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 7 டிசம்பர் 2022 நடைபெற்றது. தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. 1.46 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 18 மே 2022 அன்று தில்லியின் 3 மாநகராட்சிகளை ஒன்றிணைத்து தில்லி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு நடக்கும் இத்தேர்தலே தில்லி மாநகராட்சிக்கு நடைபெறும் முதல் தேர்தல் ஆகும். இத்தேர்தலில் முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி 134 வார்டுகளில் வென்று, தில்லி மாநகராட்சியைக் கைப்பற்றியது.

பின்னணி[தொகு]

தெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சிகளின் பதவிக்காலம் 18 மே 2022 அன்றுடன் நிறைவுற்றது. [1] .

மீண்டும் தில்லி மாநகராட்சிகளை ஒன்றிணைத்தல்[தொகு]

இந்திய அரசு 22 மார்ச் 2022 அன்று தெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சிகளின் பகுதிகளை ஒருங்கிணைத்து மீண்டும் ஒரே தில்லி மாநகராட்சியாக நிறுவ சட்ட முன்வடிவத்திற்கு ஒப்புதல் வழங்கியது.[2] ஒருங்கிணைந்த தில்லி மாநகராட்சி 22 மே 2022 அன்று நிறுவப்பட்டது.[3]

வார்டுகள் இட ஒதுக்கீடு[தொகு]

250 வார்டுகளை கொண்ட தில்லி மாநகராட்சியின் 42 வார்டுகள் அட்டவணை சமூகத்தவர்களுக்கும், 50 ச தவீதம் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. [4]

தேர்தல் அட்டவணை[தொகு]

தில்லி அரசின் தேர்தல் ஆணையம் 4 நவம்பர் 2022 அன்று தில்லி மாநகராட்சிக்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.[5]

தேர்தல் நிகழ்வுகள் அட்டவணை
தேர்தல் அறிவிக்கை நாள் 7 நவம்பர் 2022
வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் 14 நவம்பர் 2022
வேட்பு மனு பரிசீலனை நாள் 16 நவம்பர் 2022
வேட்பு மனுவை திரும்பப் பெறும் இறுதி நாள் 19 நவம்பர் 2022
தேர்தல் நாள் 4 டிசம்பர் 2022
வாக்கு எண்ணிக்கை 7 டிசம்பர் 2022

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்[தொகு]

தில்லி மாநகராட்சித் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையாக வார்டுகளை கைப்பற்றி தில்லி மாநகராட்சியை கைப்பற்றும் என்றும், பாரதிய ஜனதா கட்சி இரண்டாம் இடத்திலும்; இந்திய தேசிய காங்கிரசு மூன்றாம் இடத்திலும் வரும் எனக் கூறப்பட்டது.[6]

தேர்தல் முடிவுகள்[தொகு]

வாக்கு எண்ணிக்கை முடிவில் மொத்தமுள்ள 250 வார்களில் ஆம் ஆத்மி கட்சி 134 வார்டுகளையும், பாரதிய ஜனதா கட்சி 104 வார்டுகளையும், காங்கிரஸ் கட்சி 9 வார்டுகளையும், சுயேச்சைகள் 3 வார்டுகளையும் கைப்பற்றினர்.[7]

கட்சிகள் வாக்குகள் மொத்த வார்டுகள் (பெரும்பான்மைக்கு 126 வார்டுகள் தேவை)
வாக்குகள் % ± % போட்டியிட்ட வார்டுகள் வெற்றி பெற்ற வார்டுகள் +/- %
ஆம் ஆத்மி கட்சி 42.05% ஏற்றம் 15.82% 250 134[8] ஏற்றம் 85
பாரதிய ஜனதா கட்சி 39.09% ஏற்றம் 3.01% 250 104 வீழ்ச்சி 77
இந்திய தேசிய காங்கிரசு 11.68% வீழ்ச்சி 9.41% 247 9 வீழ்ச்சி 22
சுயேச்சைகள் 3.46% 3 வீழ்ச்சி 7
பிற கட்சிகள் 1.14% 0 வீழ்ச்சி 6
நோட்டோ 0.78%
மொத்த வார்டுகள் 250 - ±0

குறிப்புகள்[தொகு]

  1. 64 seats in NDMC, 70 seats in SDMC and 47 seats in EDMC
  2. 21 seats in NDMC, 16 seats in SDMC and 12 seats in SDMC
  3. 16 seats in NDMC, 12 seats in SDMC, 3 seats in EDMC

மேற்கோள்கள்[தொகு]

  1. "SEC likely to decide on Delhi civic body polls in second week of April: Sources". The Indian Express (in ஆங்கிலம்). 23 March 2022. பார்க்கப்பட்ட நாள் 23 March 2022.
  2. "Union Cabinet clears Bill to merge three municipal corporations of Delhi". mint (in ஆங்கிலம்). 2022-03-22. பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
  3. "Delhi's unified municipal corporation formally comes into existence". Firstpost (in ஆங்கிலம்). 2022-05-22. பார்க்கப்பட்ட நாள் 2022-05-28.
  4. டில்லி மாநகராட்சிக்கு டிச.,4ல் தேர்தல்
  5. "Delhi MCD polls to be held on December 4, results on December 7". The Indian Express (in ஆங்கிலம்). 2022-11-04. பார்க்கப்பட்ட நாள் 2022-11-04.
  6. Delhi MCD Exit Poll Results 2022 LIVE Updates: 3 exit polls predict clear win for Aam Aadmi Party
  7. General Election to Municipal Corporation of Delhi – 2022
  8. Delhi MCD Election Results 2022

வெளி இணைப்புகள்[தொகு]