1-நாப்தலீன் தயோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1-நாப்தலீன் தயோல்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
நாப்தலீன்-1-தயோல்
வேறு பெயர்கள்
1-மெர்கேப்டோநாப்தலீன், 1-நாப்தைல் மெர்கேப்டன்
இனங்காட்டிகள்
529-36-2
ChemSpider 61557
EC number 208-462-7
InChI
  • InChI=1S/C10H8S/c11-10-7-3-5-8-4-1-2-6-9(8)10/h1-7,11H
    Key: SEXOVMIIVBKGGM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 68259
SMILES
  • C1=CC=C2C(=C1)C=CC=C2S
UNII 9A78CP495H
பண்புகள்
C10H8S
வாய்ப்பாட்டு எடை 160.23 g·mol−1
தோற்றம் நிறமற்ற எண்ணெய்
அடர்த்தி 1.158 கிராம்/மில்லிலிட்டர்ர்
உருகுநிலை 15 °C (59 °F; 288 K)
கொதிநிலை 285 °C (545 °F; 558 K)
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302
P264, P270, P301+312, P330, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

1-நாப்தலீன் தயோல் (1-Naphthalenethiol) என்பது C10H7SH. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் கந்தகச் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் நாப்தலீனின் மோனோதயோல்களில் ஒன்றாக அறியப்படுகிறது. 2-நாப்தலீன் தயோல் என்பது நாப்தலீனின் மற்றொரு மோனோதயோல் ஆகும்.

தயாரிப்பு[தொகு]

நாப்தலீன்-1-சல்போனைல் குளோரைடை வெள்ளீயம்/ஐதரோகுளோரைடு முன்னிலையில் ஒடுக்குதல் வினைக்கு உட்படுத்தி 1-நாப்தலீன் தயோல் தயாரித்தல் நடைமுறையில் பின்பற்றப்படும் தயாரிப்பு முறையாகும்.[1] பலேடியம் வினையூக்கியின் முன்னிலையில் 1-புரோமோநாப்தலீனை சிலில்தயோலேட்டுடன் சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்து சிலாதயோயீத்தரை நீராற்பகுப்புக்கு உட்படுத்தியும் 1-நாப்தலீன் தயோல் தயாரிக்கப்படுகிறது.[2] முதலில் 1-புரோமோநாப்தலீனிலிருந்து பெறப்படும் கிரிக்கனார்டு வினைக் காரணியிலிருந்து இது பெறப்பட்டது.[3] இவ்வினைக்காரணியுடன் கந்தகத்தைச் சேர்த்து சூடுபடுத்தி தொடர்ந்து அமிலமாக்கல் வினையின் மூலம் சேர்மம் பெறப்பட்டது. 1-நாப்தலீன்சல்போனிக் அமிலத்துடன் முப்பீனைல்பாசுபீனைச் சேர்த்து அயோடின் வினையூக்க ஒடுக்க வினை மூலமாகவும் இதைத் தயாரிக்கலாம்.[4]

வினைகள்[தொகு]

டெட்ராமெத்திலீன்டையமீன் முன்னிலையில் 1-நாப்தலீன் தயோல் பியூட்டைல் இலித்தியத்துடன் வினைபுரிந்து 2-இலித்தியம் வழிப்பெறுதியைக் கொடுக்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Still, Ian WJ; Natividad-Preyra, Rosanne; Toste, F Dean (1999). "A versatile synthetic route to 1,5-dithiocins from o-mercapto aromatic aldehydes". Canadian Journal of Chemistry 77: 113–121. doi:10.1139/v98-230. https://archive.org/details/sim_canadian-journal-of-chemistry_1999-01_77_1/page/113. 
  2. Rane, Anil M.; Miranda, Edgar I.; Soderquist, John A. (1994). "Potassium Triisopropylsilanethiolate: Vinyl and Aryl Sulfides Through Pd-Catalyzed Cross Coupling". Tetrahed. Lett. 35 (20): 3225–6. doi:10.1016/S0040-4039(00)76870-5. 
  3. Taboury, F. (1908). "Contribution to the Study of Sulphur and Selenium Compounds of the Aromatic Series". Annales de Chimie et de Physique 15: 5–66. 
  4. Oae Shigeru; Togo Hideo (1983). "Reduction of Sulfonic Acids and Related Organosulfur Compounds with the Triphenylphosphine-Iodine System". Bulletin of the Chemical Society of Japan 56 (12): 3801–3812. doi:10.1246/bcsj.56.3802. https://archive.org/details/sim_bulletin-of-the-chemical-society-of-japan_1983-12_56_12/page/3801. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=1-நாப்தலீன்_தயோல்&oldid=3520832" இலிருந்து மீள்விக்கப்பட்டது