ஹஸ்ரத் பேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹஸ்ரத் பேகம்
ஷாஜாதி - முகலாயப் பேரரசு
பேரரசி - துராணிப் பேரரசு
Tenure5 ஏப்ரல் 1757 – 4 ஜூன் 1772
பிறப்பு4 நவம்பர் 1741
டெல்லி, இந்தியா
இறப்புஅண். 1774 (அகவை 32–33)
ஆப்கானித்தான்
புதைத்த இடம்
முஹம்மத் ஷா கல்லறை தோட்டம், நிஜாமுதீன் அவ்லியா, டெல்லி,
துணைவர்அகமது ஷா துரானி
மரபுதிமுரித் பேரரசு (பிறப்பால்) துராணிப் பேரரசு (திருமணத்தால்)
தந்தைமுகம்மது ஷா
தாய்சாஹிபா மஹால்
மதம்இஸ்லாம்

ஹஸ்ரத் பேகம் (1741 ஆம் ஆண்டு நவம்பர் 4 - 1774) ( பஷ்தூ: حضرت بېګم ) ஓர் இந்திய அரசியாவார். இவர் துராணி பேரரசின் முதல் பேரரசர் அகமது ஷா துரானியின் மனைவி ஆவார். இவர் துராணி சாம்ராஜ்யத்தின் அரசியாக 1772 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 முதல் 1757 ஆம் ஆண்டு ஜூன் 4 வரை இருந்தார்.மேலும் இவர் முகலாய பேரரசர் முஹம்மது ஷாவின் மகளாவார். இதனால் இவர் முகலாய இளவரசியும் ஆவார்.

குடும்பம் மற்றும் பரம்பரை[தொகு]

ஹஸ்ரத் பேகம் முகலாய குடும்பத்தில் பிறந்தார். இவர் முகலாய பேரரசர் முஹம்மது ஷா மற்றும் சாஹிபா மஹால் ஆகியோரின் மகள் ஆவார். [1] இவர் தனது பதினாறாவது வயதில் 1756 ஆம் ஆண்டு பிப்ரவரியில், இவரது குடும்பத்தினரை வயதான இரண்டாம் ஆலம்கீர் ஹஸ்ரத் பேகத்தை திருமணம் செய்து வைக்க கட்டாயப்படுத்தினார். [2] ஆனால் ஹஸ்ரத் வயதானவரை திருமணம் செய்வதை விட மரணத்தை விரும்பினார். இதனால் இரண்டாம் ஆலம்கீர் திட்டம் வெற்றிபெறவில்லை.

திருமணம்[தொகு]

1757 ஆம் ஆண்டு ஏப்ரலில் பேரரசின் தலைநகரான டெல்லியை சேர்ந்த பேரரசர் முஹம்மது ஷா இறப்பின் பிறகு துராணி அரசர் அஹ்மத் ஷா அப்தாலி முஹம்மது ஷாவின் 16 வயது மகளான ஹஸ்ரத் பேகத்தை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். [3] ஹஸ்ரத் பேகத்திற்கு 16 வயதாக இருந்ததால், 35 வயதான துராணி மன்னனுக்கு திருமணம் செய்துகொடுக்க பாட்ஷா பேகம் மறுப்பு தெரிவித்தார். ஆனால் அஹ்மத் ஷா ஹஸ்ரத் பேகத்தை 1757 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி டெல்லியில் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டார். [4] திருமண கொண்டாட்டங்களுக்குப் பிறகு, அஹ்மத் ஷா தனது மனைவி ஹஸ்ரத் பேகத்தை தனது சொந்த நாடான ஆப்கானிஸ்தானுக்கு அழைத்துச் சென்றார்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹஸ்ரத்_பேகம்&oldid=3044629" இலிருந்து மீள்விக்கப்பட்டது