ஹரிஷ் வாஸ்வானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹரிஷ் ஹன்ஸ்ராஜ் வாஸ்வானி ( Harish Hansraj Vaswani), (நவம்பர் 22, 1940 - ஏப்ரல் 13, 2013) ஒரு சிந்தி எழுத்தாளர், கவிஞர் மற்றும் விமர்சகர் ஆவார். இவர் அரசியல் அறிவியல் மற்றும் ஆங்கில இலக்கிய பேராசிரியராக இருந்தார். புதிய சிந்தி கவிதைகளின் முன்னோடியாக அறியப்பட்ட இவர் சிந்தி இலக்கியத்தின் செல்வாக்கு மிக்க எழுத்தாளராக இருந்தார். 1987 ஆம் ஆண்டில் இவருக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

வாழ்க்கை[தொகு]

இளமைப்பருவம்[தொகு]

ஹரிஷ் வாஸ்வானி 1940 நவம்பரில் பலுசிஸ்தானின் மலைப்பிரதேசத்தில் (இப்போது பாகிஸ்தானில் ) லோர் இலாயியில் வாஸ்வானி குடும்பத்தில் பிறந்தார்.[1] இவரது குடும்பம், இவரது நான்கு உடன்பிறப்புகளுடன், 1947 இல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்குச் சென்றது. அங்கு, இவர்கள் அகதிகளாக கடல் வழியாக சவுராஷ்டிரா மாநிலத்தை (இப்போது குஜராத்தின் ஒரு பகுதி) அடைந்தனர். இவர்கள் ஏராளமான இன்னல்களை எதிர்கொண்டனர். மேலும், இவர்கள் அகதி முகாம்களில் வாழ வேண்டியிருந்தது. சவுராஷ்டிராவில் உள்ள பன்ட்வாவில் தற்காலிகமாக குடியேறும் வரை குடும்பம் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் சென்றதால் இவரது பள்ளிக் கல்வி அடிக்கடி தடைபட்டது.

வாஸ்வானி ஆங்கிலம், அரசியல் அறிவியல் மற்றும் இந்தி ஆகிய மூன்று பிரிவுகளில் முதுகலை பட்டங்களைப் பெற்றார்; ஒவ்வொன்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி முறையில், மாணவராக சேர்ந்து படித்து பெற்ற பட்டங்களாகும். படிக்கும் போதும், பழைய தில்லியின் தரியகஞ்ச் பகுதியில் உறவினருடன் வசிக்கும் போதும், தன்னைத் தக்க வைத்துக் கொள்ள, இளங்கலை மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார்.

தனது இருபதுகளின் நடுப்பகுதியில், வாஸ்வானி, கச்சின் ஆதிபூருக்குச் சென்று, டோலானி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தார். இதையடுத்து, இவர் அரசியல் அறிவியல் துறைத் தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். இவர் ஓய்வு பெறும் வரை ஆங்கில இலக்கியங்களையும் கற்பித்தார்.[1][2]

இலக்கியப் பணி[தொகு]

பிரெஞ்சு தத்துவஞானி-சிந்தனையாளர்களான ஆல்பர்ட் காமுஸ் மற்றும் ஜீன் பால் சார்ட்ரே ஆகியோரால் செல்வாக்கு பெற்ற இவர், நாத்திகர், மத நம்பிக்கை, அரசியல் ஸ்தாபனம் மற்றும் இணக்க மனப்பான்மை ஆகியவற்றை விவாதித்தார். இவரது இலக்கிய எழுத்துக்கள் சிக்கலான இருப்பு மற்றும் மனித இருப்பின் முரண்பாடுகள் மற்றும் பிரிவினையின் வலி ஆகியவற்றைச் சுற்றியுள்ள உருவகங்களால் நிரப்பப்பட்டுள்ளன. இது, இவரது தலைமுறையின் பிற சிந்தி எழுத்தாளர்களைப் போலவே உள்ளது. இவர் பிற்கால வாழ்க்கையில் பௌத்தம் மற்றும் மனோ பகுப்பாய்வு பற்றிய தீவிர வாசகர் மற்றும் அந்த சமயத்தைப் பின்பற்றுபவராக ஆனார். ஓய்வு பெற்ற பின்னர் ஒரு குறுகிய காலத்திற்கு, ஒரு பௌத்த ஆலோசகராக இருந்தார். இந்த பிற்கால தாக்கங்கள் இவரை, மனச்சோர்வுக்கு உள்ளாக்கி, தனிமைவிரும்பியாக மாற்றின. அதனால், இவர் 1995 ஆம் ஆண்டில் எழுதுவதை நிறுத்தினார். சிந்தி இதழான ராச்சனாவின் தனது கட்டுரையின் மூலம் இந்த நோக்கத்தை பகிரங்கமாக அறிவித்தார். உலக மறுப்புக்கான முயற்சியில் சமூக ஈடுபாடுகளிலிருந்து இவர் விலகிவிட்டார். இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவை பின்பற்றி, மத நோக்கங்களுக்காக பார்வையிட்டார்.[3]

இவர், தில்லியின் சாகித்ய அகாதமி, சிந்தி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.[4]

அவர் ஏப்ரல் 13, 2013 அன்று தில்லியின் தேசிய தலைநகர் வலயம் (இந்தியா) , நொய்டாவில் காலமானார்.[1]

படைப்புகள்[தொகு]

பாணி[தொகு]

ஹரிஷ் வாஸ்வானியின் எழுத்து நடை, கூர்மையான, பிரதிபலிப்பு மற்றும் வியக்கத்தக்கது மற்றும் உளவியல் ரீதியான செயல்களால் நிறைந்தது ஆகும். இவர், வழக்கமான கவிதை, எழுத்து நடை மற்றும் இலக்கிய பகுப்பாய்விலிருந்து திசைதிருப்பினார். இதனால் இவர் புதிய சிந்தி கவிதையின் (நயீன் சிந்தி கவிதா) முன்னோடியாக கருதப்படுகிறார். மேலும், இவர் ஒரு நவீன கவிஞராக கருதப்படுகிறார்.

விருதுகள்[தொகு]

விமர்சனம், 40–84 குறித்த தனது படைப்புகளுக்காக 1987 ஆம் ஆண்டில் சிந்தி எழுத்தாளர்களுக்கான சாகித்ய அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1][5]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

1966 ஆம் ஆண்டில், பள்ளி ஆசிரியரான இந்திரா வாஸ்வானியை இவர் திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி, பிரிவினையின் போது சிந்துவின் லர்கானா மாவட்டத்தில் இருந்து தனது குடும்பத்துடன் குழந்தையாக இருந்தபோது குடிபெயர்ந்தவராவார். இவரது மனைவி இந்திராவும், ஒரு சிந்தி எழுத்தாளராக மாறினார். மேலும், அவர் இறந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 2012 ல் மரணத்திற்குப் பின் சாகித்ய அகாதமி விருதும் வழங்கப்பட்டது.[1][5] இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்; அவர், ஆங்கில மொழி பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஷெபாலி வாசுதேவ் ஆவார்.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Harish Vaswani: Famous Sindhi Poet: Academy Award: Biography | The Sindhu World". thesindhuworld.com. பார்க்கப்பட்ட நாள் 26 June 2017.
  2. DAAT-DHANI-Vol 2. (Portraits of Sindhi writers of Gujarat, 2013). Radhika Publications, Block G-1, Ram Laxman Nivas, sant Hirdaram Nagar, Bairagarh.Bhopal 462030.
  3. Special issue on Harish Vaswani. 
  4. Harish Vaswani: Portrait of The Thinker as a Writer (Cover Story). 
  5. 5.0 5.1 "Akademi Awards (1955–2015)". சாகித்திய அகாதமி. Archived from the original on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் March 4, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிஷ்_வாஸ்வானி&oldid=3747733" இலிருந்து மீள்விக்கப்பட்டது