அம்முராபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹம்முராபி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Hammurabi
அம்முராபி
பிறப்பு கிமு 1795
இறப்பு கிமு 1750
பட்டம் பாபிலோனிய அரசர்
பின் வந்தவர் சம்சு-இலுனா

அம்முராபி அல்லது ஹம்முராபி (Hammurabi) பாபிலோன் நகர்-நாட்டின் ஆறாம் அரசரும் (கி.மு 1792- 1750) பாபிலோனியப் பேரரசின் முதலாம் அரசர் ஆவார். இவரின் ஆட்சி காலத்தில் மெசொபொத்தேமியாவின் பல்வேறு நாடுகளுடன் போர் நடத்தி இவர் இறந்த பொழுது மெசொபொத்தேமியா முழுவதும் பாபிலோனியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்காலத்தில் அம்முராபி அவரது சட்டங்கள் காரணமாக குறிப்பிட்டதாக இருக்கிறார். இந்த சட்டங்கள் மனித வரலாற்றிலேயே முதலாக எழுதப்பட்ட சட்டங்களில் ஒன்றாகும்.

அம்முராபி தன்னுடைய ஆட்சி காலத்தில் பல சிறப்பான காரிங்களை செய்தான் ( நீர்ப்பாசனத்துறை, வரி வசூலிப்புத்துறை மற்றும் சமயம் சம்பந்தமான காரியங்கள்). முதல் முப்பது ஆண்டு அவனுடைய ஆட்சியில் அவன் ஒரு சிறிய இராச்சியத்தின் அரசானகவே திகழ்ந்தான். அதன் பின்பு அவன் செய்த தொடர் யுத்தங்களில் அவன் வெற்றியீட்டி பல இடங்களை கைப்பற்றினான் (லார்சா இராச்சியம், எஷீன்னா, ஆசூர், பிற்பாடு மரி). அவனுடைய காலத்தில் தான் மர்டக் (பாபிலோனிய தெய்வம்) பிரபல்யமான தெய்வமாகியது. அம்முராபி மன்னன் சிறந்த யுத்தங்களை நடத்தியிருந்த போதிலும், எல்லாராலும் மிகவும் மதிக்கப்படும் காரியம்:

அவனுடைய சட்டங்கள். முதன் முதலாக எழுதப்பட்ட சட்டங்கள் அம்முராபி மன்னனுக்கு 400 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. அம்முராபி மன்னன் 282 கட்டளைகளை தான் ஆண்ட காலத்தில் எழுதி வைத்திருந்தான். நாம் தற்காலங்கங்களில் பாவிக்கும் கட்டளைகள் போல் இல்லாவிட்டாலும், அவனுடைய கட்டளைகளில் அவன் நீதியையும், நியாயத்தையும் கடைப்பிடித்தான் என்று தெரிகிறது. அவனுடைய கட்டளைகளை அவன் ஆண்ட ராச்சியம் முழுவதும் பிரகடனப்படுத்தி அதை நடை முறையில் கொண்டுவந்தான். இவனுடைய ஆண்ட காலங்களை ஆதி பாபிலோனுடைய பொற்காலம் என்று வர்ணிப்பர்.

அம்முராபி அரசனின் சட்டங்கள் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்பது போன்ற கட்டளைகள்.

அம்முராபி மன்னனுடைய சில சட்டங்கள்:

  • சட்டம் 195: ஒரு மகன் தன்னுடைய தந்தையுடன் பிரச்சனைப்பட்டால் அவனுடைய கைகள் வெட்டப்பட வேண்டும்
  • சட்டம் 196: கண்ணுக்கு கண் பிடுங்கப்படுதல் வேண்டும்
  • சட்டம் 197: யாராவது ஒருவனுடைய எலும்புகளை முறித்தால், அவனுடைய எலும்பும் முறிக்கப்பட வேண்டும்
"http://ta.wikipedia.org/w/index.php?title=அம்முராபி&oldid=1351195" இருந்து மீள்விக்கப்பட்டது