வெப்பமண்டல பட்டாம்பூச்சி காப்பகம், திருச்சிராப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டாம்பூச்சி காப்பகத்தின் நுழைவாயில்

வெப்பமண்டல பட்டாம்பூச்சி காப்பகம் (Tropical butterfly conservatory, Trichy) இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள மேலணை காப்புக்காட்டில் 25 ஏக்கர் பரப்பளவில், காவிரி ஆறு-கொள்ளிடம் ஆறு வடிநிலப் பகுதியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி காப்பகம் ஆகும்.

விளக்கம்[தொகு]

வெப்பமண்டல பட்டாம்பூச்சி காப்பகமானது, ஸ்ரீரங்கம் அருகே உள்ள மேலூர் கிராமத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஆசியாவின் மிகப்பெரிய பட்டாம்பூச்சிகளுக்கான காப்பகம் ஆகும். இப்பட்டாம்பூச்சி காப்பகத்தில் 323 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன.[1] இப்பட்டாம்பூச்சி காப்பகத்தினைப் பொதுமக்களின் பார்வைக்கு தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா 13 நவம்பர் 2015 அன்று திறந்து வைத்தார்.[2] through a video conference.[3] இந்தக் காப்பகம் சுமார் 7.35 கோடி ரூபாய் செலவில் அமைக்கத்திட்டமிடப்பட்டு 8.67 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ளது.[3]

வண்ணத்துப்பூச்சி காப்பகம்[தொகு]

இந்த பூங்காவில் இயற்கையான சூழ்நிலையில் பொருத்தமான வண்ணத்துப்பூச்சிகள் இனப்பெருக்கம் செய்ய ஒரு வெளிப்புற காப்பக பகுதி ஒன்று உள்ளது. கோடையில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். எனவே வாழ்விடத்தை மேம்படுத்த, ஒரு செயற்கை ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. உட்புற காப்பகப் குளிரூட்டிகள் மற்றும் பசுமை இல்லங்கள் உள்ளன. வண்ணத்துப்பூச்சிகளை ஈர்க்கும் வகையில் கவனமாக ஒளிவரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.[4]

நட்சத்திர வனம்[தொகு]

நட்சத்திரவனம் என்பது இந்தப் பூங்காவின் ஒரு பகுதியாகும். இது 27 நட்சத்திரங்கள் மற்றும் 12 இராசிக்குறிய மரங்கள்/தாவரங்களை இந்திய சோதிடத்தின் அடிப்படையில் கொண்டுள்ள பகுதியாகும்.[2] மக்கள் தங்கள் நட்சத்திரத்துடன் தொடர்புடைய மரத்தை தங்கள் வீடுகளுக்கு அருகில் நட்டு வளர்த்து பாதுகாப்பதை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.[5]

வசதிகள்[தொகு]

நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் உள்ளன. பள்ளி மாணவர்கள் இங்கு கல்விச் சுற்றுப்பயணங்களை மேற்கொள்கின்றனர்.[6]

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 106th species spotted in Tropical Butterfly Conservatory in Trichy
  2. 2.0 2.1 "TRICHY CIRCLE" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2018-08-16.
  3. 3.0 3.1 Murali, Harish (16 November 2015). "Butterfly park opened in Trichy". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/trichy/Butterfly-park-opened-in-Trichy/articleshow/49795838.cms. 
  4. R., Rajaram (31 October 2015). "Butterfly conservatory at Srirangam". The Hindu. https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/butterfly-conservatory-at-srirangam/article7824616.ece. 
  5. Ashok, Sudharshan (22 June 2013). "A butterfly park for Trichy". The Times of India. https://timesofindia.indiatimes.com/life-style/spotlight/A-butterfly-park-for-Trichy/articleshow/20700775.cms. 
  6. "Educational trip to butterfly park – Sri Sivananda Balalaya".