வீ. மலைக்கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீ. மலைக்கண்ணன் (V. Malaikannan)(பிறப்பு ஏப்ரல் 17, 1934) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் இராமநாதபுரம் மாவட்டம் சாலை கிராமம் வண்டல் பகுதியினைச் சார்ந்தவர். இளையான்குடி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினையும், மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தினையும் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பினையும் முடித்தவர் ஆவார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர் 1967 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இளையாங்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாடு சட்டப் பேரவை “யார்-எவர்” 1967 (in English and Tamil). Madras. 1967. p. 278. {{cite book}}: More than one of |at= and |pages= specified (help); Unknown parameter |trans_title= ignored (help); Unknown parameter |மொழி-= ignored (help)CS1 maint: location missing publisher (link) CS1 maint: unrecognized language (link)
  2. தமிழ்நாடு சட்டப் பேரவை “யார்-எவர்” 1971. Madras: Tamil Nadu Legislative Assembly Department Madras 9. 01.01.1972 [1971]. p. 186. {{cite book}}: Check date values in: |date= and |year= / |date= mismatch (help); More than one of |pages= and |page= specified (help); Unknown parameter |trans_title= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீ._மலைக்கண்ணன்&oldid=3538191" இலிருந்து மீள்விக்கப்பட்டது