வீற்றிருந்த பெருமாள் கோவில், வேப்பத்தூர்

ஆள்கூறுகள்: 11°00′51″N 79°25′53″E / 11.0142°N 79.4313°E / 11.0142; 79.4313
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விமானம்
வீற்றிருந்த பெருமாள் கோயில், வேப்பத்தூர்
வீற்றிருந்த பெருமாள் கோயில், வேப்பத்தூர் is located in தமிழ் நாடு
வீற்றிருந்த பெருமாள் கோயில், வேப்பத்தூர்
வீற்றிருந்த பெருமாள் கோயில், வேப்பத்தூர்
வீற்றிருந்த பெருமாள் கோயில், வேப்பத்தூர், தஞ்சாவூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:11°00′51″N 79°25′53″E / 11.0142°N 79.4313°E / 11.0142; 79.4313
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:வேப்பத்தூர்
சட்டமன்றத் தொகுதி:திருவிடைமருதூர்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
ஏற்றம்:44.37 m (146 அடி)
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

வீற்றிருந்த பெருமாள் கோவில், வேப்பத்தூர் (Veetrirundha Perumal Temple) என்பது இந்து சமயக் கடவுள் விஷ்ணுக்குரிய கோவிலாகும். இக்கோவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ள வேப்பத்தூர் கிராமத்தில் உள்ளது.

கற்கள் மற்றும் சாந்து கொண்டு அமைக்கப்பட்ட இந்த விஷ்ணு கோவில் பொ.ஊ. 850-களில் பல்லவ மன்னர்களாலும் பின்னர் சோழ மன்னன் முதலாம் இராஜராஜ சோழனாலும் அதற்குப் பிறகு 1520களில் கிருஷ்ணதேவராயராலும் கட்டுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. செங்கல்லால் ஆன பழைய கோவிலுக்கு மேல் இக்கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில், பல்லவர் காலத்துக்கும் முந்தைய கோவில்களாக அறியப்பட்டுள்ள மிகவும் பழமையான இரண்டு கோவில்களில் இக்கோவில் ஒன்றாகும். மற்றொன்று சாளுவண் குப்பத்தில் 2004 சுனாமிக்குப் பின் அகழ்ந்தெடுக்கப்பட்ட சுப்பிரமணியர் திருக்கோவில்.[1] வீற்றிருந்த பெருமாள் கோயில் புதுப்பித்தலுக்காகக் காத்திருக்கிறது.

கட்டுமானம்[தொகு]

சுமார் 40 அடி உயரத்தில் கூரையால் மூடப்பட்ட விமானம். தற்போது தமிழகத்தில் இவ்வாறாக செங்கல் கட்டுமானத்துடன் கூடிய விமானம் எதுவும் இல்லை. சிதைந்த நிலையில் உள்ள கட்டட அமைப்புகள் ஒரு காலத்தில் இக்கோயில் சிறப்பான நல்ல நிலையில் கட்டுமானத்தோடு இருந்ததை உணர்த்துகிறது. தரைப்பகுதியிலிருந்து மேடை போன்று சற்று உயர்ந்த நிலையில் சென்றால் கருவறையை அடையலாம். கருவறைக்கு மேல் தஞ்சாவூர் பெரிய கோயிலின் விமான உட்புறத்தில் காணப்படும் கூடு போன்ற அமைப்பு காணப்படுகிறது.

மூலவர், பிற சிற்பங்கள்[தொகு]

கருவறையில் மூலவரோ அருகில் உள்ள கட்டுமானங்களில் பிற தெய்வங்களோ இல்லை. மூலவரையும் பிற சிற்பங்களையும் தனியாக அருகே ஓர் அறையில் காணலாம். கருவறையின் உட்பக்கச் சுவரில் ஓவியங்களைக் காணமுடியும்.

ஓமந்தூர் வீற்றிருந்த பெருமாள்[தொகு]

இதே பெயரில் உள்ள மற்றொரு வீற்றிருந்த பெருமாள் கோயில் புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. S. Sivakumar (August 13, 2010). "Much more than stone". The Hindu இம் மூலத்தில் இருந்து நவம்பர் 10, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121110070737/http://www.hindu.com/fr/2010/08/13/stories/2010081351260800.htm. 

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]