விஜய் பாகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய் பாகல்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்தாம்ராத்வாஜ் சாகு
தொகுதிதுர்க், சத்தீசுகர்
சட்டமன்ற உறுப்பினர்-சத்தீசுகர்-பதான்
பதவியில்
8 திசம்பர் 2008 – 8 திசம்பர் 2013
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 ஆகத்து 1959 (1959-08-15) (அகவை 64)
உர்லா, தர்க், மத்தியப் பிரதேசம், இந்தியா
(தற்பொழுது சத்தீசுகர், இந்தியா)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ரஜனி பாகல்
பிள்ளைகள்சவுரப்-மகன் & பிரகதிக்சா-மகள்
பெற்றோர்நம்முல்லால் பாகல் (தந்தை), சத்யபாமா பாகல் (தாய்)
வாழிடம்(s)பிலாய், சத்திசுகர், இந்தியா
தொழில்அரசியல், விவசாயம்
மூலம்: [1]

விஜய் பாகல் (Vijay Baghel)(பிறப்பு: ஆகத்து 15, 1959) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் துர்க் மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1][2] இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

பாகேல் முதன்முதலில் பிலாய் நகரசபைக்கு 2000ஆம் ஆண்டு சுயேச்சை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2003 சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பதான் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்தப் போட்டியில் பூபேஷ் பாகலிடம் தோல்வியடைந்தார். மீண்டும், 2008 சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு , பூபேஷ் பாகலை 7,842 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்று உள்துறை அமைச்சர் நன்கி ராம் கன்வாரின் நாடாளுமன்றச் செயலாளராக ஆனார்.[3] மீண்டும், விஜய் 2013 சட்டமன்றத் தேர்தலில் பூபேஷ் பாகலை எதிர்த்துப் போட்டியிட்டார், ஆனால் இம்முறை தோல்வியடைந்தார். பின்னர் 2019 பொதுத் தேர்தலில், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு இந்தியத் தேசிய காங்கிரசின் பிராதிமா சந்திராகருக்கு எதிராக துர்க் தொகுதியில் போட்டியிட்டு 3,91,978 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Chhattisgarh Lok Sabha Election 2019 winners". Zee News. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Dropping all MPs pays off for Shah". Rajendra Sharma. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 June 2019. பார்க்கப்பட்ட நாள் 17 March 2020.
  3. http://cgvidhansabha.gov.in/hindi_new/satra/third_assembly/3RD_ASSEMBLY.pdf

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_பாகல்&oldid=3945728" இலிருந்து மீள்விக்கப்பட்டது