விக்கிப்பீடியா பேச்சு:பங்களிப்பாளர் அறிமுகம்/ஜெயமோகன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெயமோகன் சிறந்த எழுத்தாளர் என்பது அனைவரும் அறிந்ததுதான்.அவரைப் பற்றிய அறிமுகம் விக்கிப்பீடியாவில் இடம் பெறுவதை நானும் விரும்புகிறேன். ஆனால் இங்கு விக்கிப்பீடியாவில் அவர் என்னென்ன பங்களிப்புகள் செய்துள்ளார். அதில் முக்கியமான பங்களிப்புகள் என்ன என்பதாக விக்கிப்பீடியா பங்களிப்பாளர் அறிமுகம் இருக்க வேண்டுமே தவிர தனிப்பட்ட அறிமுகமாக அமைவது சரியல்ல. விக்கிப்பீடியாவிற்கேற்ற பங்களிப்பாளர் அறிமுகமாக இருக்க சரியான மாற்றம் அவசியம் என்பதை இங்கு நான் வலியுறுத்துகிறேன். அனைவரது கருத்தையும் அறிய விரும்புகிறேன். --தேனி.எம்.சுப்பிரமணி. 14:33, 18 சனவரி 2011 (UTC)[பதிலளி]

ஆம், அதுதான் சரியாக இருக்கும். மற்ற அறிமுகங்களைப் போலவே தமது முதன்மைப்பணியை ஒருவரிக்குள் தர வேண்டும். 'வெகுவாக அறியப்பட்ட எழுத்தாளர் என்று மட்டும் குறிப்பிடலாம்' மற்ற தகவல்கள் அனைத்தும் விக்கிப்பீடியா தொடர்பிலேயே இருத்தல் நலம். தேவைப்பட்டால் தற்போதைய இருப்பிடம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் குறிப்பிடலாம். மேலும் வெளித்தளங்களுக்கு முதல் பக்கத்தில் இருந்து தொடுப்பு தருவது சரியல்ல. பயனர் பக்கத்துக்கு மட்டும் இணைப்பு தரலாம். -- சுந்தர் \பேச்சு 15:16, 18 சனவரி 2011 (UTC)[பதிலளி]