விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச் 20, 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாசான் போர் என்பது ஐ.நா படைகளுக்கும் வடகொரியப் படைகளுக்கும் இடையே நடந்த போராகும். இது 1950 இல் நிகழ்ந்த தொடக்க நிலை கொரியப் போரின் ஒரு பகுதியாகும். இப்போர் 5 ஆகத்து முதல் 19 செப்டம்பர் வரை தென்கொரியாவில் உள்ள மாசானுக்கும் நாக்தாங் ஆற்றுக்கும் அருகில் நடந்தது. இது அப்போது நிகழ்ந்த பல பெரிய போர்களில் ஒன்றாகும். மேலும்...


அக்கா இன மக்கள் தென்கிழக்கு ஆசியாவில் வாழும் மலைவாழ் இனத்தவர். இவர்கள் தாய்லாந்து, மியான்மர், லாவோஸ், சீனாவின் யுன்னான் மாகாணம் ஆகிய இடங்களில் உள்ள மலைகளின் உயரமாக பகுதிகளில் உள்ள சிறிய கிராமங்களில் வாழ்கிறார்கள். இவர்கள் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பர்மாவினதும், யுனானினதும் எல்லைப்புறப் பகுதிகளிலிருந்து சீனாவின் ஊடாக தென்கிழக்கு ஆசியாவுக்கு புலம்பெயர்ந்து வந்து குடியேறினர். மேலும்..