விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டெம்பர் 7, 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனித வாழ் நாளின் இறுதி வருடங்கள் முதுமை எனப்படுகிறது. ஏறத்தாழ 60 வயதுக்கு மேற்பட்டோரை முதியவர் என்பர். இளம்பருவத்தில் இருந்து படிபடியாக மனிதர் முதுமைப்படுவர். இன்றுவரை, முதுமை வாழ்வின் மாற்ற முடியா ஒரு பகுதியாகவே இருக்கின்றது. முதுமையும் சாவுமே மனிதன் சந்திக்கும் தவிர்க்கமுடியா அதி மோசமான கொடுமையாக பலராலும் பாக்கப்படுகிறது. ஆகையால், இயன்றவரை வாழ்நாளை அதிகரிக்க பல்வேறு ஆய்வுகளும் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் இதுவரைக்கும் முதுமைப்படுதலை தடுக்க பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட எந்த வழிமுறையும் இல்லை.


ஷக்கீரா இசபெல் மெபாரக் ரிபோல் (Shakira Isabel Mebarak Ripoll) என்கிற ஷக்கீரா (Shakira) (பிறப்பு: பெப்ரவரி 2, 1977) ஒரு கொலம்பியப் பாடகர், லெபனீசு மற்றும் ஐரோப்பிய மரபுசார்ந்த பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடல் தயாரிப்பாளர், ஆடல்விரும்பி, கொடையாளர். 1990களின் இடையிலிருந்து பாப் இசை மூலமாக இலத்தீன் அமெரிக்காவில் அறிமுகம் ஆனவர். எசுப்பானிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஷக்கீரா, சரளமாக ஆங்கிலம், போர்த்துகீசம், இத்தாலியன், அரபு மொழிகளும் தெரிந்தவர். லாண்டரி சர்வீஸ் (Laundry Service) என்கிற ஆங்கில இசைத்தொகுப்பின் மூலம் ஆங்கிலம் பேசும் இசைவிரும்பிகளின் இதயத்தில் நுழைந்தார்.


வாழை மரம் உண்மையில் தாவர வகைப்படுத்தலின் படி ஒரு சிறுசெடியாகும் (herb). வாழையின் அறிவியல் பெயர் Musa spp. வாழை தென் கிழக்கு ஆசியாவில் தோன்றியது. வாழைமரம் 8 மீ உயரம் வரை வளரக்கூடியது. அதன் பெரிய இலைகள் 3 மீ நீளம் வரை இருக்கும். வாழைப்பழம் மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் நீளமாக இருக்கும். வழைப்பழங்கள் வாழைக்குலையில் வரிசையாக கொத்துகொத்தாய் அமைந்திருக்கும். ஒவ்வொர்ரு கொத்தும் 'சீப்பு' (ஆங்கிலத்தில் hand) என்றும், பல சீப்புகளைக்கொண்ட முழு வாழைக்கொத்து 'குலை' அல்லது 'தார்' (ஆங்கிலத்தில் stem) என்று அழைக்கப்படுகிறது.