விக்கிப்பீடியா:செய்திகளில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறுக்கு வழி:
WP:ITN
  • 1977 இல் ஏவப்பட்ட வொயேஜர் 1 விண்வெளி ஆய்வுகலம் கடந்த ஐந்து மாதங்களில் முதல் முறையாக படிக்கக்கூடிய தரவை புவிக்கு அனுப்புவதாக நாசா அறிவித்தது.
  • இந்திய சதுரங்க வீரர் குகேசு (படம்) 2024 பிடே வேட்பாளர் சுற்றில் வெற்றி பெற்று, உலக சதுரங்க வாகையாளர் பட்டத்திற்காகப் போட்டியிடும் இளைய போட்டியாளர் ஆனார்.
  • தைவான், உவாலியன் நகருக்கருகில் 7.4-அளவு நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர்.
  • 2023 அகாதமி விருது நிகழ்வில், ஓப்பன்கைமர் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் உட்பட ஏழு விருதுகளைப் பெற்றது.
அண்மைய இறப்புகள்: உமா ரமணன் • ஈழவேந்தன் • அம்பி •

view · history · related changes · edit

முன்பக்கத்தில் இடம் பெறும் செய்திகளில் பிரிவு தற்போது நடைபெறும் நிகழ்வுகள் தொடர்புபட்ட கட்டுரையை நேரடியாக முன்பக்கத்தில் காட்சிப்படுத்தி, செய்தியை வழங்கி வருகின்றது. இது விக்கிப்பீடியாவை பெரும் கலைக்களஞ்சியமாக உருவாக்குதல் என்ற மைய நோக்கத்திற்கு உதவி செய்கிறது.

விக்கிப்பீடியா ஒரு இணை செய்தித்தாள் அல்ல, புத்தாக்க ஆய்வு என்பது இங்கும் கடைப்பிடிக்கப்படுகின்றது.

நோக்கம்[தொகு]

  • வாசிப்பவர்கள் விரைவாக செய்தி தொடர்பான கட்டுரைகளைக் கண்டுபிடித்து வாசிக்க உதவுதல்.
  • தரமான கட்டுரைகளைக் காட்சிப்படுத்த உதவுதல்.
  • வாசிப்பவர்கள் குறித்த விடயத்தில் ஆர்வமாக இல்லாவிடினும், அவர்கள் ஆர்வத்தை தூண்ட உதவுதல்.
  • விக்கிப்பீடியாவை ஊக்கமிக்க வளமாக மாற்றுதல்.

செய்திக்கான தகுதிகள்[தொகு]

  • செய்திக்கான "குறிப்பிடத்தக்க" முக்கியத்துவமுள்ள விடயம் கொண்டிருத்தல்
  • கட்டுரை இற்றைப்படுத்தப்பட்டு, நடப்புச் செய்தியைக் கொண்டதாக இருத்தல்.
  • செய்தியுடன் தொடர்புடைய கட்டுரை இணைக்கப்பட்டு இருத்தல் வேண்டும்.

பிரிவுகள்[தொகு]

படிமங்கள்[தொகு]

கட்டுப்பட்ட உள்ளடக்கம் கொண்ட படிமங்களை காட்சிப்படுத்த முடியாது. ஆகவே விக்கிமீடியா பொதுவகத்தில் உள்ள படிமங்கள் ஏற்புடையவை. ஆயினும், அவற்றின் பதிப்புரிமம் தொடர்பான நிலையைக் கண்டு காட்சிப்படுத்துவது ஏற்புடையது.

அண்மைய இறப்பு[தொகு]

அண்மைய இறப்பு தொடர்பான, குறிப்பிடத்தக்க நபர்களை இங்கு இடலாம். இறப்பு தொடர்பில் தனியான, குறிப்பிடத்தக்க கட்டுரை இருந்தால் மட்டும் இப்பகுதியில் இடுவதைத் தவிர்த்து மேலுள்ள பகுதியில் இடலாம். எ.கா: ஒசாமா பின் லாடனின் மரணம்

பிற நிகழ்வுகள்[தொகு]

தொடர் நிகழ்வுகளை இங்கு இடலாம். எ.கா: விளையாடடுத் தொடர்கள், தொடர்ச்சியான யுத்தங்கள்.

தொடர்புபட்டது[தொகு]