விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 7, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • அனைத்துலக பல்லுயிர்ம ஆண்டாக 2010 ஆம் ஆண்டை ஐ.நா. அறிவித்துள்ளது;
    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் / தொகுத்தவற்றுள் எல்லாந் தலை -- குறள். 322
  • 1842 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்ட பச்சையப்பன் கல்லூரியில் 1947ஆம் ஆண்டு வரை இந்துக்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.
  • லியனார்டோ டா வின்சி ஒரு கையால் எழுதிக்கொண்டே இன்னொரு கையால் வரையும் திறன் கொண்டிருந்தாராம்.
  • ஒரு மின்னல் கீற்று வளிமண்டலத்தை 50,000 டிகிரி பாரன்ஹைட் வரையில் சூடேற்றுகிறது.
  • முதல் சிப்கோ இயக்கம் (1974)கார்வாலில் நடைபெறவில்லை; 1730 -ஆம் ஆண்டில் ஜோத்பூர் மாவட்டத்தின் கேஜார்லி என்ற கிராமத்தைச் சேர்ந்த 363 பிஷ்னோய் இன மக்கள் அவர்களின் புனித மரமான கேஜ்ரியைக் (வன்னி மரம்) கட்டியணைத்தவாறு உயிர் துறந்தனர்.
  • காவலூரிலுள்ள வைணு பாப்பு வானாய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள 45 செ.மீ சிமிட் தொலைநோக்கியின் உதவியுடன் 1988 பெப்ருவரி 17 அன்று ஒரு சிறிய கோள் (minor planet) ராஜமோகன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது -- இந்தியா கண்டுபிடித்த முதல் (சிறிய) கோள் அதுவே -- அதற்கு 4130 ராமானுஜன் என்று பெயரிடப்பட்டுள்ளது.