விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2023

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வானவேடிக்கையில் ஈடுபட்டுள்ள ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் புளு ஏஞ்சல்ஸ் பிரிவின் சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ், எப்-16, போயிங் எப்/ஏ-18இ/எப் சுப்பர் கோனட் வானூர்திகள்.

படம்: Staff Sgt. Andrew D. Sarver
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

பிரான்டென்போர்க் வாயில் செருமனியின் நன்கு அறியப்பட்ட நில அமைப்பும் ஆகும். இது பேர்லின் நகரின் மத்தியில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

படம்: Thomas Wolf
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

ஜேம்சு வெப் விண்வெளித் தொலைநோக்கி என்பது அகச்சிவப்பு வானியலை நடத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு விண்வெளி நோக்காய்வுக்கலம் ஆகும். விண்வெளியில் உள்ள மிகப்பெரிய ஒளித் தொலைநோக்கி இதுவாகும்.

படம்: NASA/MSFC/David Higginbotham/Emmett Given
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

நேபாளத்தின் காத்மாண்டு மாவட்டத்திலுள்ள கீர்த்திபூர் எனும் இடத்திலுள்ள தௌடாகா ஏரியில் பெரிய நீர்க்காகங்ளும் கருவால் வாத்தும். பெரிய நீர்க்காகம் என அறியப்படும் பறவை நீர்க்காகக் கடற்பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். கருவால் வாத்து என்பது வாத்து இனத்தைச் சார்ந்த பறவையாகும்.

படம்: Prasan Shrestha
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

துருவ ஒளி என்பது வட, தென் துருவங்களை அண்மிய பகுதிகளில் தோன்றும் ஓர் அபூர்வ ஒளித் தோற்றமாகும். இது பொதுவாக இரவு நேரங்களிலேயே தோன்றுகின்றது. இந்த ஒளித்தோற்றமானது பொதுவாக ஆர்க்டிக், அண்டார்க்டிக்கா பகுதிகளில் இலகுவில் காணக்கூடியதாக இருக்கின்றது.

படம்: AstroAnthony
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

மூடுபனி என்பது புவியின் மேற்பரப்பிற்கு அண்மையாக வளியில் நீர்த்துளிகளோ, அல்லது பனி படிகங்களோ தொங்கிக் கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கும். இது பொதுவாக ஈரலிப்பான நிலத்திற்கு அண்மையாகவோ, அல்லது ஏரி, குளம், கடல் போன்ற நீர்நிலைகளுக்கு அருகிலோ தோன்றும்

படம்: Abdul Momin
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

உக்ரைன் நாட்டின் மேற்கில் அமைந்துள்ள ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணத்தில் விடியல் காட்சி. விடியல் என்பது சூரிய உதயம் அல்லது புலர் எனவும் அழைக்கப்படும் நிகழ்வானது காலையில் அடிவானத்தின் மேலாக ஞாயிறு தோன்றும் நிகழ்வாகும். அதிலும் குறிப்பாக சூரியனின் மேற்பரப்பு தெரிவதைக் குறிக்கும்.

படம்: Vitalii Bashkatov
தொகுப்பு · சிறப்புப் படங்கள்