வருண் சிங் பாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வருண் சிங் பாட்டி
Varun Singh Bhati
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு13 பெப்ரவரி 1995 (1995-02-13) (அகவை 29)
வசிப்பிடம்நொய்டா பெருநகர், உத்தரப் பிரதேசம், இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுஇணை தடகளம்
மாற்றுத்திறனாளர்இளம்பிள்ளை வாதம்
மாற்றுத்திறன் வகைப்பாடுA2
நிகழ்வு(கள்)உயரம் தாண்டல், டி42
பதக்கத் தகவல்கள்
தடகளம் (இணை விளையாட்டு உயரம் தாண்டல்)
நாடு  இந்தியா
சீனா திறந்தநிலை தடகள வெற்றியாளர்
தங்கப் பதக்கம் – முதலிடம் சீனா திறந்தநிலை தடகள வெற்றியாளர் டி42
இணை ஒலிம்பிக் விளையாட்டுகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2016 ரியோ டி செனிரோ டி42
World Para Athletics Championships
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2017 இலண்டன் டி42
ஆசிய இணை விளையாட்டுகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 இந்தோனேசியா டி42/63

வருண் சிங் பாட்டி (Varun Singh Bhati) இந்தியாவைச் சேர்ந்த ஓர் உயரம் தாண்டுதல் வீரர் ஆவார். 1995 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இளம் வயதிலேயே இளம்பிள்ளைவாத நோயால் பாதிக்கப்பட்ட இவர், பள்ளி நாட்களில் விளையாட்டுப் போட்டிகளில் சேர்ந்து விளையாடினார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால இணை ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக இணை தடகள வெற்றியாளர் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் உட்பட பன்னாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

2014 ஆம் ஆண்டு முதல், முன்னாள் தேசிய தடகள வீரரான சத்யநாராயணா என்பவர் இவருக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார். இணை விளையாட்டு வெற்றியாளர்கள் திட்டத்தின் மூலம் கோசுபோர்ட்சு அறக்கட்டளையால் வருண் சிங் பாட்டி ஆதரிக்கப்பட்டார். [1] [2] நொய்டா பெருநகரில் வசித்து வருகிறார். தற்போது பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். [3]

தொழில்[தொகு]

வருண் சிங் பாட்டிக்கு டி42 என்ற முழங்கால் ஊனம் குறைபாடு உள்ளது. 2012 ஆம் ஆண்டில் இலண்டனில் நடந்த 2012 கோடைகால இணை ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு 1.60 மீட்டர் உயரம் தாண்டிய செயல்திறன் மூலம் 'ஏ' தகுதி மதிப்பெண்ணைப் பதிவு செய்தபோது கவனத்தைப் பெற்றார். இருப்பினும், இந்தியாவிற்கு குறைந்த அளவு இடங்கள் இருந்ததால் இவர் 2012 விளையாட்டுகளுக்கு தகுதி பெறத் தவறிவிட்டார். [3] [4]

2014 ஆம் ஆண்டு கொரியாவின் இன்சியானில் நடந்த ஆசிய இணை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார், அங்கு இவர் 5 ஆவது இடத்தைப் பிடித்தார். அதே ஆண்டில் சீன திறந்தநிலை தடகள வெற்றியாளர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். 2015 ஆம் ஆண்டு கத்தாரின் தோகாவில் நடந்த 2015 இணை உலக வெற்றியாளர் போட்டியில் இவர் மீண்டும் 5 ஆவது இடத்தைப் பிடித்தார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய-ஓசியானா தடகள வெற்றியாளர் போட்டியில் 1.82 மீட்டர் உயரம் தாண்டினார். இப்போட்டியில் வருண் தங்கம் வென்றதோடு புதிய ஆசிய சாதனையையும் படைத்தார். [3] [5]

பிரேசிலின் ரியோ டி செனிரோவில் நடந்த 2016 கோடைகால இணை ஒலிம்பிக் போட்டியில் வருண் சிங் பாட்டி 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். இதுவே இவரது தனிப்பட்ட சிறந்த சாதனையாகும். [3] [6] 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக இணை தடகள வெற்றியாளர் போட்டியில் 1.77 மீட்டர் உயரம் தாண்டி போட்டியில் வெண்கலம் வென்றார். [7]

விருதுகள்[தொகு]

2018 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 29 ஆம் தேதியன்று புது தில்லியில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் வருண் சிங் பதிக்கு அருச்சுனாவிருது (2017) வழங்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டு வருண் சிங் பாட்டிக்கு அருச்சுனா விருது வழங்கப்பட்டது [8]

டைம்சு ஆஃப் இந்தியா விளையாட்டு விருதுகளில் 2017 ஆம் ஆண்டின் இணை தடகள வீரராக வருண் தேர்ந்தெடுக்கப்பட்டார். [9]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Varun Bhati". www.indusind.com. பார்க்கப்பட்ட நாள் 2019-01-01.
  2. "GoSports Foundation".
  3. 3.0 3.1 3.2 3.3 "Varun Singh Bhati overcame obstacles to clinch bronze at Paralympics". The Times of India. 10 September 2016. பார்க்கப்பட்ட நாள் 5 October 2016.
  4. "Varun Bhati makes the cut in high jump for Paralympics". HighBeam Research. 29 March 2012. Archived from the original on 11 September 2016. பார்க்கப்பட்ட நாள் 5 October 2016.
  5. "(Athletics) Athlete Profile : BHATI Varun Singh - Dubai 2016 IPC Athletics Asia-Oceania Championships". International Paralympic Committee. 13 February 1995. பார்க்கப்பட்ட நாள் 5 October 2016.
  6. "Rio Paralympics: Mariyappan Thangavelu wins gold, Varun Bhati clinches bronze in men's high jump". The Times of India. 10 September 2016. பார்க்கப்பட்ட நாள் 5 October 2016.
  7. "Silver for Sharad Kumar, Bronze for Varun Bhati at World Para Athletics Championship". The Indian Express (in Indian English). 2017-07-23. பார்க்கப்பட்ட நாள் 2019-01-01.
  8. "Para high jumper Varun Bhati to get Arjuna Award". The New Indian Express. Archived from the original on 1 January 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-01-01.
  9. "varun-bhati-voted-para-athlete-of-the-year". https://timesofindia.indiatimes.com/mahindra-scorpio-toisa-varun-bhati-voted-para-athlete-of-the-year/articleshow/63081885.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வருண்_சிங்_பாட்டி&oldid=3897506" இலிருந்து மீள்விக்கப்பட்டது