வங்காளதேச நாட்டுப்புற இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காளதேச நாட்டுப்புற இலக்கியம்
வங்காள இலக்கியம்
(வகை அடிப்படையில்)
வங்காள மொழி
வங்காள இலக்கிய வரலாறு
வங்காள இலக்கிய வரலாறு
வங்காள மொழி ஆசிரியர்கள்
காலவரிசை பட்டியல்
முக்கிய நாட்டுப்புற இலக்கியம்
மைமென்சிங் கிடிகா

வங்காளதேச நாட்டுப்புற இலக்கியம் (Bangladeshi folk literature) என்பது வங்காள இலக்கியத்தின் கணிசமான பகுதியைக் கொண்டுள்ளது. இது கல்வியறிவற்ற சமூகங்களால் உருவாக்கப்பட்டு வாய்வழியாக ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு அனுப்பப்பட்டாலும் அது வங்காள இலக்கியங்களை உட்கொண்டிருந்தது. தனிப்பட்ட நாட்டுப்புற இலக்கியங்கள் ஒரு கூட்டு உற்பத்தியாக மாறி சமூகத்தின் மரபுகள், உணர்ச்சிகள், எண்ணங்கள் மற்றும் மதிப்புகளை எடுத்துக்கொள்கின்றன. [1]

வரலாறு[தொகு]

மூன்றாம் நூற்றாண்டு முதல், மோரியர், குப்தர்கள், பாலாக்கள், சேனாக்கள் மற்றும் முஸ்லிம்கள் போன்றவர்கள் ஒவ்வொருவராக இதன் நிலத்தை ஆள வந்தனர். இதன் விளைவாக, அவர்கள் தங்கள் வாழ்க்கை முறைகளையும் கலாச்சார பண்புகளையும் பழங்குடி மக்கள் மீது திணித்தனர். அதைத் தொடர்ந்து, போத்துக்கீசிய, பிரான்சு, ஆங்கிலேயக் கப்பல்கள் வங்காளத் துறைமுகங்களில் நங்கூரமிட்டன. [2] அவர்கள் தங்கள் பொருட்களை மட்டுமல்லாமல், தங்கள் பழக்கவழக்கங்களையும் விட்டுச் சென்றனர். ஒவ்வொரு இனமும் அதன் சொந்த அடையாளத்தை விட்டுச்சென்றது. அது உடல் மட்டுமல்ல, கலாச்சாரமும் கூட. இது கூட்டாக கலாச்சாரத்தின் அடிப்படையை உருவாக்கியது.

வாய்வழி இலக்கியமும் அதன் செல்வாக்கும்[தொகு]

நாட்டுப்புற இலக்கியங்கள் வாய்வழியாக பரவின என்பதால், இது சில நினைவூட்டல் சாதனங்கள் மற்றும் மொழி மற்றும் பாணியின் வடிவங்களை நம்பியுள்ளது. பெங்காலி நாட்டுப்புற இலக்கியங்களில் பல்வேறு வகையான காவியங்கள், கவிதை மற்றும் நாடகம், நாட்டுப்புறக் கதைகள், வசனங்கள், பழமொழிகள் போன்றவை உள்ளன. மேலும் கல்வியறிவு பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும் சமூகத்தில் தற்போது வரை உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வெவ்வேறு இனங்களால் வங்காளதேசத்தின் நாட்டுப்புறக் கதைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, இன்றைய வங்காளதேசத்தின் ஏராளமான நாட்டுப்புறக் கதைகளில் பலவிதமான கூறுகள் உள்ளன. அவை வரலாற்றுச் சக்திகளால் ஓரளவு விளக்கப்பட்டிருக்க வேண்டும்.

நாட்டுப்புற இலக்கியத்தின் உள்ளடக்கங்கள்[தொகு]

கதைகள், பாடல்கள், கவிதை வசனங்கள், பழமொழிகள், புதிர்கள், வசீகரம், மூடநம்பிக்கைகள், கட்டுக்கதைகள் போன்ற முறைப்படுத்தப்பட்ட நாட்டுப்புறக் கதைகளின் அனைத்து கிளைகளையும் உள்ளடக்கியது.

நாட்டுப்புற இசையும் பாடலும்[தொகு]

வங்காளதேசத்தின் இசைப் பாரம்பரியம் குறைந்த கருவியுடனான பாடல் அடிப்படையிலானது. நாட்டுப்புற பாடல்களை ஏழு பிரிவுகளாக வகைப்படுத்தலாம்: காதல், சடங்கு, தத்துவம் மற்றும் பக்தி, வேலை மற்றும் உழைப்பு, தொழில் மற்றும் தொழிலாளிகள், நையாண்டி மற்றும் வேடிக்கை மற்றும் கலப்பு போன்றவை. மறுபுறம் நாட்டுப்புற இசை, பால், கோம்பிரா, பாட்டியாலி, பவையா, கவிகன், காட்டு கன், ஜுமூர், பரமாசி, மெய்லி கிட், ஜாத்ரா கன், சாரி கன் போன்ற பல்வேறு வடிவங்கள் உள்ளன. பால் பாரம்பரியம் வங்காள நாட்டுப்புற இசையின் தனித்துவமான பாரம்பரியமாகும். மேலும் வங்காளதேசத்தில் ஏராளமான பிற இசை மரபுகளும் உள்ளன. அவை ஒரு பிராந்தியத்திலிருந்து மற்றொன்றுக்கு வேறுபடுகின்றன. கோம்பிரா, பாட்டியாலி, பவையா ஆகியவை நன்கு அறியப்பட்ட இசை வடிவங்களில் சில. வங்காளத்தின் நாட்டுப்புற இசை பெரும்பாலும் ஏக்தாராவுடன் சேர்ந்துள்ளது. இது ஒரே ஒரு நரம்பிசைக் கருவியாகும். [3]

நாட்டுப்புறக் கதைகள்[தொகு]

நாட்டுப்புறக் கதைகள் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு வாய்வழியாகக் கொடுக்கப்படும் கதைகளாகும். அவை உரைநடைகளில் உள்ளன. அவை எளிமையானவை அல்லது சிக்கலானவை. கருப்பொருள், பொருள் மற்றும் வடிவத்தின் அடிப்படையில், நாட்டுப்புறக் கதைகளில் விசித்திரக் கதைகள், புராணக் கதைகள், மதக் கதைகள், சாகசக் கதைகள், வீரக் கதைகள், முனிவர் கதைகள், வரலாற்றுக் கதைகள், புனைவுகள், விலங்குக் கதைகள், கட்டுக்கதைகள் அல்லது நகைச்சுவைக் கதைகள் போன்றவை. பெங்காலி நாட்டுப்புறக் கதைகளின் முக்கிய கதாபாத்திரம் விதி மற்றும் தெய்வீகத்தன்மை சார்ந்தது. மேலும், புத்தி, ஞானம், உழைப்பு, போராட்டம் அல்லது வேலையை விட மந்திர சக்தியை செயல்படுத்துகிறது.

நாட்டுப்புற நாடகம்[தொகு]

நாட்டுப்புற நாடகம் என்பது நடனம், பாடல், இசை மற்றும் பாசன், ஜாத்ரா, பாலா கன், காத்து, காம்பிரா, அல்காப், கவிகன், பொம்மலாட்டம் போன்றவற்றின் கலவையாகும் . இது பொழுதுபோக்கு அல்லது கல்வி நோக்கங்களுக்காக இருக்கலாம். நாட்டுப்புற நாடகத்தின் மிகவும் பிரபலமான வடிவம் ஜாத்ரா. ஜாத்ட்ராவில், வீரத்தின் புகழ்பெற்ற நாடகங்கள், புராணக் கதைகள், காதல் மற்றும் சோகத்தின் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் இதேபோன்ற எண்ணற்ற கருப்பொருள்கள் திறந்தவெளி நாடகங்களில் இயற்றப்படுகின்றன. சில நாட்டுப்புற நாடகங்கள் பாடல்களை வலியுறுத்துகின்றன. மற்றவைகள் நடனம் அல்லது நடிப்பை வலியுறுத்துகின்றன. நாட்டுப்புற நாடகம் பொதுவாக இராமர், சீதை, அருச்சுனன், திரௌபதி, இராதா கிருஷ்ணன் போன்ற புராண நாயகர்களின் கதைகளை அடிப்படையாகவும், நிமாய் சன்யாசி, பெஹுலா மற்றும் இலக்ஸிந்தர், இஷா கான் திவான், பிரோஸ் திவான், ஜைனாப் மற்றும் ஹசன், சாகினா மற்றும் காசெம், ஹனிஃபா மற்றும் ஜெய்குன், ரஹீம் பாட்ஷா, ரூபன், பைத்யானி போன்றவர்களின் கதைகளையும் கொண்டது. நாட்டுப்புற நாடகங்கள் பொதுவாக ஒரு புராண, வரலாற்று, மத மற்றும் அரசியல் சுவை கொண்டவை.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • Dinesh Chandra Sen, Maimansingha-Gitika, Calcutta, 1923
  • Purbabanga-Gitika, 1926; Maria Edward Leach ed
  • Ashutosh Bhattacharya, Banglar Lokasahitya, vol. 1, Calcutta, 1963;