சென் பீட்டர்ஸ்பேர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லெனின்கிராட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சென் ஐசாக் கதீட்ரல்
ஐரொப்பாவில் சென் பீட்டர்ஸ்பேர்கின் அமைவு

சென் பீட்டர்ஸ்பேர்க் (Saint Petersburg, ரஷ்ய மொழி: Санкт-Петербу́рг (சாங்க்ட் பீட்டர்பூர்க், Sankt Peterburg) ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமாகும். இது நீவா ஆற்றின் அருகே, பின்லாந்து வளைகுடாவின் கிழக்கே பால்டிக் கடலின் கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இதன் வேறு பெயர்கள்: பெட்ரோகிராட் (Петрогра́д, 1914 - 1924), லெனின்கிராட் (Ленингра́д, 1924 - 1991)[1].

இந்நகரம் சார் மன்னனான முதலாம் பீட்டரினால் மே 27, 1703 இல் அவனது "ஐரோப்பாவுக்கான கண்ணாடி"யாக அமைக்கப்பட்டது[2]. இந்நகரம் ரஷ்ய சாம்ராச்சியத்தின் தலைநகராக இருநூறு ஆண்டுகளுக்கு (1712-1728, 1732-1918) மேலாக இருந்து வந்துள்ளது. 1918 இல் ரஷ்யப் புரட்சி வரையில் இது தலைநகராக இருந்தது.[3]. மாஸ்கோ, லண்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இது ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய நகரமாகும். 4.6 மில்லியன் மக்கள் இங்கு வசிக்கிறார்கள். இதன் மொத்தப் பரப்பளவு 1439 சதுர கிமீ ஆகும்.

அரண்மனை

மேற்கோள்கள் [தொகு]

  1. சாங்க்ட் பீட்டர்ஸ்பேர்க் நகர ஆளுநர்: [1]
  2. மகா பீட்டர்: அவனது வாழ்வும் உலகமும் (Knopf, 1980]) by Robert K. Massie, ISBN 0-394-50032-6
  3. Nicholas and Alexandra: An Intimate Account of the Last of the Romanovs and the Fall of Imperial Russia (Athenum, 1967) by Robert K. Massie, ASIN B000CGP8M2 (also, Ballantine Books, 2000, ISBN 0-345-43831-0 and Black Dog & Leventhal Publishers, 2005, ISBN 1-57912-433-X)

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சென்_பீட்டர்ஸ்பேர்க்&oldid=1347624" இருந்து மீள்விக்கப்பட்டது