இரியூக்கியூ தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரியுக்யு தீவுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரியூக்கியூ தீவுகள் கியூசூ தீவிற்கு தென்மேற்கே அமைந்துள்ளன.

இரியூக்கியூ தீவுகள் (Ryūkyū Islands (琉球列島 Ryūkyū-shotō?), அல்லது நான்செய் தீவுகள் (Nansei Islands (南西諸島 Nansei-shotō?, lit. "Southwest Islands"), கியூசூவிற்கும் சீனக் குடியரசுக்கும் இடையிலான சப்பானி தீவுகள்.[1] இங்குள்ள மக்கள் இரியூக்கியூ மக்கள் எனப்படுகின்றனர்.

வரலாறு[தொகு]

14ஆம் நூற்றாண்டில் இத்தீவுகளில் இரியூக்கியூ இராச்சியம் (琉球王国 Ryūkyū-ōkoku?) ஆண்டு வந்தது.[2] திறை கட்டும் அரசாட்சியாக சீனப் பேரரசுடன் இருந்து வந்தது.[3]

17ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த அரசாட்சி சப்பானுடன் திறை செலுத்தும் நாடாக இணைந்தது.[4] preserving as usual the independence of the kingdom and its rulers.[5]

காலக்கோடு[தொகு]

  • 1314: நான்சன், சூசன், ஒக்கூசன் இராச்சியங்கள் நிறுவப்படல்
  • 1429: இரியூக்கியூ இராச்சியம் நிறுவப்பட்டது
  • 1609: சத்சூமா இராச்சியத்தால் இரியூக்கியூ இராச்சியம் தாக்கப்பட்டது
  • 1872: புதிய இரியூக்கியூ கொற்றம் நிறுவப்பட்டது, 1872-1879[6]
  • 1972: ஐக்கிய அமெரிக்கா இரியூக்கியூ தீவுகளை மீண்டும் சப்பானிற்கு திருப்பியளித்தல்

புவியியல்[தொகு]

இத்தீவுகள் கிழக்கு சீனக்கடலின் கீழ்கோடியில் அமைதிப் பெருங்கடலின் மேற்கு கோடியில் அமைந்துள்ளது.

இத்தீவுகள் இரு புவியியல் வலயங்களாக பிரிபட்டுள்ளன: அமாமி தீவை மையமாகக் கொண்ட வடக்கு இரியூக்கியூ தீவுகள், மற்றும் ஒக்கினவா தீவை மையமாக்க் கொண்ட தெற்கு இரியூக்கியூ தீவுகள் சில நேரங்களில் தெற்கு இரியூக்கியூ தீவுகள் ஒகினாவா தீவுகள் என்றும் சாக்கிசிமா தீவுகள் என்றும் மேலும் பிரிக்கப்படுகின்றன.

இத்தீவுகளில் மிகவும் பெரியது ஓக்கினாவா தீவு.[7]

பண்பாடு[தொகு]

இத்தீவு மக்களால் கராத்தே கண்டுபிடிக்கப்பட்டது; குறிப்பாக ஒக்கினாவா மாகாணத்தில்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Nussbaum, Louis-Frédéric. (2005). "Ryūkyū Islands" in Japan Encyclopedia, p. 801.
  2. Julius Klaproth. (1832). San kokf tsou ran to sets, ou Aperçu général des trois royaumes, p. 175 n1.
  3. Kerr, George. (2000). Okinawa: The History of an Island People, p. 63.
  4. Klaproth, pp. 177.
  5. Smits, Gregory. (1999). Visions of Ryūkyū: Identity and Ideology in Early-Modern Thought and Politics, p. 28.
  6. 6.0 6.1 Matsumura, Wendy. (2007). Becoming Okinawan: Japanese Capitalism and Changing Representations of Okinawa, p. 38; excerpt, "March 27, 1879 marks the birth of ஓக்கினாவா மாகாணம் and the death of the short-lived Ryukyu domain, which itself came into being on September 14, 1872, replacing the Ryukyu kingdom."
  7. Nussbaum, "Okinawa-ken" at pp. 746-747.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரியூக்கியூ_தீவுகள்&oldid=3805045" இலிருந்து மீள்விக்கப்பட்டது