ஓக்கினாவா தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஓக்கினாவா
Okinawa

Native name: 沖縄本島
சப்பானின் ஓக்கினாவா மாகாணத்தில் ஓக்கினாவா தீவு
சப்பானின் ஓக்கினாவா மாகாணத்தில் ஓக்கினாவா தீவு
புவியியல்
[[Image:
ஓக்கினாவா தீவு is located in Ryukyu Islands
{{{alt}}}
|250px]]
அமைவு அமைதிப் பெருங்கடல்
ஆள்கூறுகள் 26°30′N 127°56′E / 26.500°N 127.933°E / 26.500; 127.933
தீவுக்கூட்டம் ஓக்கினாவா தீவுகள்
ஆட்சி
சப்பான் கொடி சப்பான்
மாகாணம் ஓக்கினாவா மாகாணம்
பெரிய நகரம் நாகா (313,970)
இனம்
மக்கள் தொகை 1,384,762 (2009)

ஓக்கினாவா தீவு (Okinawa Island) என்பது சப்பானில் ஓக்கினாவா மாகாணத்தில் கிழக்கு சீனக்கடலிலுள்ள ஒரு தீவும் ஓக்கினாவா தீவுக் கூட்டத்தின் மிகப் பெரியதும், சப்பானியத் தீவுகளில் ஐந்தாவது பெரியதும் ஆகும். இது பாரிய றியுக்கியு தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ளது. இது 112 கிலோ மீட்டடர் நீளமும் 11 கிலோ மீட்டர் அகலமும் 1199 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்டது. ஓக்கினாவா மாகாணத் தலைநகர் நாகா ஓக்கினாவா தீவில் அமைந்துள்ளது.

இத்தீவில் வசிப்போர் (நடுநிலக் கடல் பகுதியில் வாழும் சார்தீனியர்களைப் போன்று) உலகின் நீண்ட காலம் உயிர் வாழ்வோர் எனப் பெயர் பெற்றிருக்கின்றனர். ஒவ்வொரு 100,000 பேருக்கும் 34 பேர் நூறாண்டுகளுக்கு மேல் வாழ்கின்றனர். இது சப்பானின் தரவுகளை விட மூன்று மடங்காகும். [1]

இரண்டாவது உலகப் போரின் போது அமெரிக்கப் படைகளுக்கும் சப்பானியப் படையினருக்கும் இடையே கடும் போர் இங்கு நடைபெற்றது. 1945-ல் அமெரிக்கப் படைகள் வெற்றி பெறும் முனைப்புடன் இத்தீவில் வந்தபோது சப்பானியப் படையினரின் பெரும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. மூன்று மாதகால சண்டையில் இருதரப்பினருக்கும் பெருத்த இழப்பு ஏற்பட்டது. முடிவில் அமெரிக்கப் படை வெற்றி பெற்றது. 1972 -ல் இத்தீவு சப்பானியரிடம் திருப்பி அளிக்கப்பட்டது. இருப்பினும் இன்றும் அமெரிக்கப் போர்த்தளம் இங்குள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஓக்கினாவா_தீவு&oldid=1494764" இருந்து மீள்விக்கப்பட்டது