ரவுல் குரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரவுல் குரியல்
பிறப்பு23-சூன்-1913
கெய்ரோ, எகிப்து
இறப்பு23-பிப்ரவரி-2000
பாரிசு, பிரான்சு
தேசியம்பிரெஞ்சு
படித்த கல்வி நிறுவனங்கள்பாரிஸ் பல்கலைக்கழகம்
பணிஎகிப்தியலசிசுட் மற்றும் ஓரியண்டலிசுட்
உறவினர்கள்கென்றி குரியல் (சகோதரர்)

ரவுல் குரியல் (Raoul Curiel) [1] பிரெஞ்சு நாட்டினைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர், எகிப்தியியலாளர் மற்றும் ஓரியண்டலிசுட் ஆவார். இவர் 1913 ஆம் ஆண்டு சூன் மாதம் 23 ஆம் தேதியன்று எகிப்து நாட்டின் கெய்ரோ என்னும் இடத்தில் பிறந்தார். 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதியன்று பாரிசு நாட்டின், பிரான்சு என்னும் இடத்தில் இறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

குரியல் கெய்ரோவில் வளமான யூத குடும்பத்தில் பிறந்தார். ஒரு பணக்கார வங்கியாளரான டேனியல் குரியலின் மகனும் கென்றி குரியலின் சகோதரரும் இவர் ஆவார். 1933 ஆம் ஆண்டு, பாரிசு பல்கலைக்கழகத்தில் (அல்லது சோர்போன் ) சட்டம் படிக்க கெய்ரோவை விட்டு வெளியேறினார். பின்னர் இந்தியவியல் மற்றும் ஈரானிய படிப்புகளுக்கு மாறினார்.[2]

1939 ஆம் ஆண்டு இவர் தனது சகோதரர் கென்றி குரியல் மற்றும் சார்சசு கெனைன் ஆகியோருடன் இணைந்து டான் குயிச்சோட்டே என்ற வார இதழைத் தொடங்கினார். [3]

தொல்லியல் மற்றும் இந்தியவியல்[தொகு]

இரண்டாம் உலகப் போரின் போது, குரியல் லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூத்தில் பணியாற்றினார். அங்கு இவர் பிரெஞ்சு இராணுவத்திற்கான தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டார். பெய்ரூத்தில், இவர் டேனியல் சிலம்பெர்கர் மற்றும் கென்றி செரிக் ஆகியோருடன் நட்பு கொண்டார்.[1] குரியல் 1945 ஆம் ஆண்டு ஆப்கானித்தானில் பிரெஞ்சு தொல்பொருள் பிரதிநிதியாக இருந்தார். பாக்கித்தானின் தேசிய அருங்காட்சியகத்தில், 1954 ஆம் ஆண்டு முதல் 1958 ஆம் ஆண்டு வரை பழங்காலப் பொருட்களின் இயக்குநராக பணியாற்றினார்.[4] பின்னர் பிரெஞ்சு தேசிய நூலகத்தில் ஓரியண்டல் நாணயங்கள் துறையின் கண்காணிப்பாளராக செயல்பட்டார். [5][6]

நூல் பட்டியல்[தொகு]

  • யுனே கலெக்‌சன் டி மொன்னீசு டி குய்வ்ரே அரபோ-சசனைட்சு (பாரிசு, 1984) [9][10]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "CURIEL, Raoul – Persons of Indian Studies by Prof. Dr. Klaus Karttunen" (in அமெரிக்க ஆங்கிலம்). 13 June 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.
  2. "Raoul Curiel" (in fr). Le Monde.fr. 2000-02-25. https://www.lemonde.fr/archives/article/2000/02/25/raoul-curiel_3683101_1819218.html. 
  3. Don LaCoss (Spring 2010). "Egyptian Surrealism and "Degenerate Art" in 1939?". The Arab Studies Journal 18 (1): 105. https://www.jstor.org/stable/27934079. 
  4. "Curiel, Raoul – Persée". www.persee.fr. பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.
  5. "Collections Online | British Museum". www.britishmuseum.org. பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.
  6. "Curiel" – via BnF Catalogue général (http://catalogue.bnf.fr).
  7. Christie, Anthony (February 1957). "Raoul Curiel and Daniel Schlumberger: Tréors monétaires d'Afghanistan. (Mémoires de la Délégation Archéologique Française en Afghanistan, Tom. XIV.) [x, 131 pp., 16 plates. Paris: Imprimerie Nationale, 1953."] (in en). Bulletin of the School of Oriental and African Studies 19 (1): 183–184. doi:10.1017/S0041977X0011941X. பன்னாட்டுத் தர தொடர் எண்:1474-0699. https://www.cambridge.org/core/journals/bulletin-of-the-school-of-oriental-and-african-studies/article/raoul-curiel-and-daniel-schlumberger-treors-monetaires-dafghanistan-memories-de-la-delegation-archcologique-francaise-en-afghanistan-tom-xiv-x-131-pp-16-plates-paris-imprimerie-nationale-1953/C9DCF98112AC04473AB7C871F5A9625A. 
  8. Ball, Warwick (2019-05-02) (in en). Archaeological Gazetteer of Afghanistan: Revised Edition. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-927758-2. https://books.google.com/books?id=EW-fDwAAQBAJ&q=curiel&pg=PA1948. 
  9. Gyselen, Rika; Curiel, Raoul (1984). iraniennes, Association pour l'avancement des études. ed. Une Collection de monnaies de cuivre arabo-sasanides. Studia Iranica. Cahiers. 2. https://halshs.archives-ouvertes.fr/halshs-01612822. 
  10. "Author Search Results". klgrid.kmlink.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-28.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவுல்_குரியல்&oldid=3874021" இலிருந்து மீள்விக்கப்பட்டது