பாரிஸ் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாரிஸ் பல்கலைக்கழகம்
Université de Paris
Armes de l universite de paris.png

இலத்தீன்: Universitas magistrorum et scholarium Parisiensis
குறிக்கோள்: Hic et ubique terrarum (Latin)
குறிக்கோள் தமிழில்: இங்கும் பாரின் எந்தப் பகுதியிலும்
நிறுவல்: Circa 1150-1793, 1896-1970
வகை: Corporative (ca. 1150-1793), public (1896-1970)
அமைவிடம்: பாரிஸ், பிரான்சு
வளாகம்: Urban
The Sorbonne, பாரிசு, 17ஆம் நூற்றாண்டு engraving

பாரிஸ் பல்கலைக்கழகம் (பிரெஞ்சு: Université de Paris) பிரான்சுத் தலைநகர் பாரிசில் அமைந்துள்ளது. ஐரோப்பாவில் தோற்றுவிக்கப்பட்ட மூத்தப் பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று. 12 ஆம் நூற்றாண்டின் நடுவே நிறுவப்பட்டாலும், 1160 மற்றும் 1250 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் அதிகாரப் பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அறியப்படுகிறது. இடையில் பல மாற்றங்கள் பெற்றும், 1970 ஆம் ஆண்டுவாக்கில் இயங்காமலும், பின்னர் நிறுத்தப்பட்டும், 13 தன்னாட்சி அதிகாரம் கொண்ட பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. இந்த பல்கலை சில வேளைகளில் சோர்போன் என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கான காரணம், 1257 ஆம் ஆண்டுவாக்கில் இராபர்ட் தே சோர்போன் என்பவரால் நிறுவப்பட்ட கல்லூரியாகும். தற்போதுள்ள 13 பல்கலைகளில் முதல் நான்கு பல்கலைக்கழகங்கள் அதே கட்டிடத்தில் இயங்கி வந்தன, பிற மூன்றின் பெயர்களிலும் "சோர்போன்" என்ற பெயரும் உள்ளது..

பாரிசிலுள்ள பல்கலைக்கழகங்கள் தற்போது தன்னாட்சியில் இயங்குகின்றன. பாரிசு கழகத்திற்கு மாற்றாக சில க்ரெதெயில் கழகத்தின்கீழும், மற்றும் சில வெர்செய்லசு கழகத்தின் கீழும் இயங்குகின்றன. இந்த 13 பல்கலைக்கழகங்களின் நிர்வாகப் பொறுப்பை, ஒரே வேந்தரே மேற்பார்வையிட்டு வந்தார். அலுவலகங்கள் சோர்போனில் இருந்தன. 2006ஆம் ஆண்டின் கணக்குப் படி, மௌரிசு கெனெல் என்பவர்தான் வேந்தராக ஆக உள்ளார். இவற்றின் துணை வேந்தராக பியரி கிரிகோரி பணியாற்றுகிறார். இந்த இடத் தொடர்பினாலும், வரலாற்றுத் தொடர்புகளாலும் இவை ஒட்டுமொத்தமாக பாரிஸ் பல்கலைக்கழகம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. மற்றபடி, கல்வி வழங்குவதற்கென பாரிஸ் பல்கலைக்கழகம் என்று ஏதுமிருந்தது இல்லை. .

இந்த பல்கலைக்கழகம் கலை, மருத்துவம், சட்டம், இறையியல் ஆகிய நான்கு துறைகளுக்கான ஆசிரியர்களைக் கொண்டிருந்தது. கலைத் துறை குறைந்த மதிப்பில் இருந்தது மட்டுமின்றி அதிக மாணவர்களையும் கொண்டிருந்தது. ஏனென்றால் மேற்படிப்புகளைப் படிக்க கலை பயின்றிருக்க வேண்டும். மாணவர்கள் மொழி அல்லது நாடு வாரியாக நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். அந்த நான்கு பிரிவுகள்: பிரான்சு, நோர்மாண்டி, பிகர்டி மற்றும் இங்கிலாந்து ஆகியன. நாடுவாரியாக அனுமதிக்கப்படுவதை விட அதிகம் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப் பட்டனர். ஏனென்றால் இங்கிலாந்து-ஜெர்மனி என்ற நாட்டுப் பிரிவில் ஸ்காண்டினேவியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வந்த மாணவர்களும் சேர்ந்தனர்.

மேற்கோள்கள் [தொகு]

  •  This article incorporates text from a publication now in the public domain:  "University of Paris". Catholic Encyclopedia. (1913). ரொபெர்ட் அப்பில்டன் கம்பனி. 

மேலும் படிக்க [தொகு]

  • André Tuilier: Histoire de l'Université de Paris et de la Sorbonne ("History of the University of Paris and of the Sorbonne"), in 2 volumes (From the Origins to Richelieu, From Louis XIV to the Crisis of 1968), Paris: Nouvelle Librairie de France, 1997 ;
  • Jean-Louis Leutrat: De l'Université aux Universités ("From the University to the Universities"), Paris: Association des Universités de Paris, 1997
  • Philippe Rive: La Sorbonne et sa reconstruction ("The Sorbonne and its Reconstruction"), Lyon: La Manufacture, 1987
  • Jacques Verger: Histoire des Universités en France ("History of French Universities"), Toulouse: Editions Privat, 1986

வெளியிணைப்புகள் [தொகு]

அமைவிடம்: 48°50′55″N 2°20′36″E / 48.84861, 2.34333

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாரிஸ்_பல்கலைக்கழகம்&oldid=1371256" இருந்து மீள்விக்கப்பட்டது