இந்தியவியல்
இந்தியயியல் (Indology) இந்தியத் துணைக்கண்டத்தின் பண்பாடு, மதம், சமூகவியல், வரலாறு ஆகியவற்றை ஆராயும் அறிவுத்துறை. இது ஒரு சிறப்ப்புப்பெயரே ஒழிய ஓரு தனி அறிவுத்துறை அல்ல.
[தொகு] உள்ளடக்கம்
இந்தியவியலின் உள்ளே இந்திய, பாகிஸ்தான், வங்காளம், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளைப்பற்றிய ஆய்வுகளும் அடங்கும். பொதுவாக ஆரம்பகால ஜெர்மானிய அறிஞர்களைச் சுட்டவே இச்சொல் பயன்படுத்தப்பட்டது. இப்போது இப்பெயர் பொதுவாக கையாளப்படுவதில்லை. பதிலுக்கு தெற்காசிய ஆய்வுகள் என்ற சொல்லே புழக்கத்திலுள்ளது
[தொகு] வரலாறு
இந்தியயியல் இந்தியாவைப்பற்றி எழுதிய தொன்மையான பயணிகளின் குறிப்பில் இருந்தே தொடங்குகிறது. மெகஸ்தனிஸ் [கிமு 350–290 ] முதல் இந்தியவியலாளர் எனப்படுகிறார். ஆனால் பொதுவாக இந்தியாவைப்பற்றி எழுதிய ஐரோப்பியர்களையே இந்த வரிசை சுட்டுகிறது
நவீன இந்தியயியலின் தொடக்கப்புள்ளிகள் ஹென்றிதாமஸ் கோல்ப்ரூக் (Henry Thomas Colebrooke), வில்லியம் ஷெல்கெல்[August Wilhelm Schlegel] போன்றவர்கல். 1822ல் உருவான ஆசியவியல் கழகம் (The Société Asiatique) இந்தியயியல் ஆய்வுகளுக்கு ஊக்கமளித்தது. வேந்திய ஆசியயியல் கழகம் (Royal Asiatic Society) 1824 ல் உருவானது. ஜெர்மன் கீழையியல் கழகம் (German Oriental Society) 1845ல் உருவாயிற்று . இவை இந்தியயியல் ஆய்வை மேலெடுத்தன
இந்தியயியல் ஆய்வுகளில் பெரிய ஊக்கத்தை அளித்தது சம்ஸ்கிருத நூல்களின் மொழியாக்கமாகும். மாக்ஸ் முல்லரை தொகுப்பாசிரியாகக் கொண்டு 1879ல் ஆரம்பித்த கீழைநாட்டு புனித நூல்கள் மொழிபெயர்ப்பு வரிசை இந்தியவியல் ஆய்வுகளில் பெரிய முன்னேற்றமாக அமைந்தது.