மாக்ஸ் முல்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாக்ஸ் முல்லர்
பிறப்பு6 திசம்பர் 1823
Dessau, Dessau-Roßlau
இறப்பு28 அக்டோபர் 1900 (அகவை 76)
ஆக்சுபோர்டு
படித்த இடங்கள்
  • Alte Nikolaischule (Leipzig)
பணிநூலகர், பல்கலைக்கழகப் பேராசிரியர், எழுத்தாளர், philologist, religious studies scholar, orientalist
வாழ்க்கைத்
துணை/கள்
Georgina Adelaide Grenfell, Georgina Adelaide Grenfell
குழந்தைகள்Beatrice Stanley Muller, Mary Emily Müller, William G. Max Muller
கையெழுத்து
பிரெட்ரிக் மாக்ஸ் முல்லர்

மாக்ஸ் முல்லர் (டிசம்பர் 6, 1823 - அக்டோபர் 28, 1900), என்று பரவலாக அறியப்பட்ட பிரெட்ரிக் மாக்ஸ் முல்லர் (Friedrich Max Müller) ஒரு ஜெர்மானிய மொழியியலாளரும், கீழைத்தேச ஆய்வாளரும் ஆவார். இந்தியவியலைத் தொடக்கி வைத்தவர்களுள் ஒருவராகக் கருதப்படும் இவர், சமய ஒப்பாய்வுத் துறையை உருவாக்கியவராகவும் கருதப்படுகிறார். இத் துறையில் இவர், ஆய்வு நூல்களையும், சாதாரண பொதுமக்களுக்கான நூல்களையும் எழுதியுள்ளார். இவருடைய மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட, கிழக்கத்தியப் புனித நூல்கள் (Sacred Books of the East)[1] என்னும் பெயர்கொண்ட 50 தொகுதிகள் அடங்கிய பெரிய நூல் விக்டோரியா காலத்தின் ஆய்வு முயற்சிகளுக்குச் சான்றான ஒரு நினைவுச் சின்னமாக இன்றும் திகழ்கிறது.

விவேகானந்தருடன்[தொகு]

சுவாமி விவேகானந்தர் இவரைப் பற்றி, "தாம் எழுதிய உரையைப் புதுப்பிக்க சாயனர்தான் இப்போது மாக்ஸ்முல்லராகப் பிறந்திருக்கிறார் என்று நான் எண்ணுகிறேன். நீண்ட காலமாகவே எனக்கு இந்தக் கருத்து இருந்தது. மாக்ஸ்முல்லரைப் பார்த்த பிறகு அது உறுதியாகிவிட்டது." என்று கூறியுள்ளார்

ரிக் வேதம்[தொகு]

ரிக்வேதத்தை வெளியிட அவருக்குக் கிழக்கிந்திய கம்பெனி ஒன்பது லட்சம் ரூபாய் கொடுத்தது. அதன் கையெழுத்து பிரதியை தயாரிக்கவே அவருக்கு இருபத்து ஐந்து வருடங்கள் ஆயிற்று. அச்சிடுவதற்கு மேலும் இருபது வருடங்கள் பிடித்தன.

ராமகிருஷ்ணர்: வாழ்வும், வாக்கும்[தொகு]

இவர் சுவாமி விவேகானந்தரின் குருவான ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அவதார புருஷர் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டவர். அவரைக் குறித்த கட்டுரைகளும், புத்தகமும் எழுதியவர். இவர் எழுதிய "ராமகிருஷ்ணர்: வாழ்வும், வாக்கும்" (Râmakrishna: His Life and Sayings (1898)) என்ற புத்தகம் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றி வெளிநாட்டினரால் எழுதப்பட்ட புத்தகங்களுள் முன்னோடியான ஒன்று.

திலகரைப் பற்றிய கருத்து[தொகு]

இவர் இந்தியாவின் பால கங்காதர திலகர் சிறையில் அடைக்கப்பட்ட போது, அப்போதைய விக்டோரியா மகாராணிக்கு திலகர் விடுதலை செய்யப்பட வேண்டும், சிறையில் நல்லவிதமாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதினார். வில்லியம் வில்சன் ஹன்டர் மற்றும் பலரும் இக்கடிதத்தில் கையெழுத்திட்டனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Sacred Books of the East". eBooks@Adelaide, University of Adelaide. 2014. Archived from the original on 2015-09-05. பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2015.

உதவி நூல்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாக்ஸ்_முல்லர்&oldid=3567030" இலிருந்து மீள்விக்கப்பட்டது