நூலகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நூலகர், 1556 ஓவியம் (யூசெப் ஆர்ச்சிம்போல்டோ)

நூலகர் (librarian) என்பவர் நூலகமும் தகவல் அறிவியலும் துறையில் பயிற்சி பெற்ற தகவல் நிபுணர் ஆவார். வழமையாக நூலகர் என்பவர் ஒரு நூலகத்தில் நூல்களை கையாளும் செயற்பாட்டை மேற்கொள்பவராவார் ஆனால் நவீன நூலகர் பல்வேறுபட்ட தகவல் வளங்களை கையாளும் பணியை மேற்கொண்டு தகவல் விஞ்ஞானியாக செயற்படுகின்றார். பணியாற்றும் நூலகங்களின் வகைகளுக்கு ஏற்ப அங்கு பணிபுரியும் நூலகரின் வகையும் மாற்றமடையும்.

நூலகருக்கான படிப்புகள்[தொகு]

இந்தியாவில் நூலகர் பணியிடங்களுக்கு உதவக் கூடிய வகையில் சில பல்கலைக்கழகங்கள் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பாடங்களில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளைக் கொண்டுள்ளன. சில பல்கலைக்கழகங்களில் இதற்கான சான்றிதழ் பயிற்சியும் உள்ளன. இளங்கலை பட்டப்படிப்புக்கு ஏதாவது பட்டப்படிப்பும், முதுகலைப் படிப்புக்கு இளங்கலை நூலக அறிவியல் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கு இளங்கலை நூலக அறிவியல் பட்டமும் கல்வித் தகுதியாக உள்ளன. சான்றிதழ் படிப்புகளுக்கு மேல்நிலைக் கல்வி (+2) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இந்தியாவில் நூலகவியல் படிப்பை வழங்கும் கல்வி நிலையங்கள்[தொகு]

தமிழ்நாடு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நூலகர்&oldid=1365349" இருந்து மீள்விக்கப்பட்டது