யூடிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்தொண்டைச் சில்லை
இந்திய வெண்தொண்டைச் சில்லை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எசுடிரில்டிடே
பேரினம்:
யூடிசு
மாதிரி இனம்
யூடிசு காண்டன்சு
ஆப்பிரிக்க வெண்தொண்டைச் சில்லை
ஜெமிலின், 1789
சிற்றினம்

உரையினை காண்க

யூடிசு (Euodice) என்பது எசுடுரிடிடே குடும்பத்தில் உள்ள சிறிய அளவிலான, விதைகளை உண்ணும் பறவைகளின் ஓர் பேரினமாகும். இந்த பேரினத்தின் சிற்றினங்கள் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவின் வறண்ட பகுதிகளில் காணப்படுகின்றன. இவை பொதுவாக வெண்தொண்டைச் சில்லை என்று குறிப்பிடப்படுகின்றன. இவை முன்பு லோஞ்சூரா பேரினத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.

"சாம்பல் தலை சில்லை" என்ற பெயரைப் பகிர்ந்து கொள்ளும் வெந்தலை அலகு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது. ஆனால் இசுபெர்மெசுடசு பேரினத்தில் வைக்கப்படுகிறது.

வகைபிரித்தல்[தொகு]

யூடிசு பேரினமானது 1862ஆம் ஆண்டில் செருமன் இயற்கை ஆர்வலர் லுட்விக் ரீசென்பாக் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இந்த பெயர் பண்டைய கிரேக்கச் சொல்லான யூ (eu) என்பதன் பொருள் "நல்ல" என்றும் டிகோசு (ōdikos) என்பதன் பொருள் "இசை" அல்லது "பாடுதல்" ஆகும். [2] இந்தப் பேரின மாதிரி இனம் 1890ஆம் ஆண்டில் ரிச்சர்ட் பவுட்லர் சார்ப் என்பவரால் ஆப்பிரிக்க வெண்தொண்டைச் சில்லை என அறிவிக்கப்பட்டது.[3][4]

இந்திய மற்றும் ஆப்பிரிக்க வெண்தொண்டைச் சில்லை முன்பு லோஞ்சூரா பேரினத்தில் வைக்கப்பட்டன. 2020-ல் வெளியிடப்பட்ட ஒரு மூலக்கூறு தொகுதி பிறப்பு வரலாற்றில், இந்த இனங்கள் லோஞ்சூராவின் உறுப்பினர்களுக்கு அடித்தளமாக இருக்கும் உட்கோட்டை உருவாக்கியது.[5][6]

சிற்றினங்கள்[தொகு]

பேரினம் இரண்டு இனங்களைக் கொண்டுள்ளது:[6]

படம் பொது பெயர் அறிவியல் பெயர் விநியோகம்
ஆப்பிரிக்க வெண்தொண்டைச் சில்லை யூடிசு காண்டன்சு மத்திய ஆப்பிரிக்கா
இந்திய வெண்தொண்டைச் சில்லை யூடிசு மலபாரிகா இந்திய துணைக்கண்டம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. Ludwig Reichenbach (1862) (in German). Die Singvögel als Fortsetzung de vollständigsten Naturgeschichte und zugleich als Central-Atlas für zoologische Gärten und für Thierfreunde. Ein durch zahlreiche illuminirte Abbildungen illustrirtes Handbuch zur richtigten Bestimmung und Pflege der Thiere aller Classen. Dresden and Leipzig: Expedition Vollständigsten Naturgeschichte. பக். 46. https://www.biodiversitylibrary.org/page/13523292. 
  2. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. பக். 152. 
  3. Sharpe, R. Bowdler (1890). Catalogue of the Passeriformes or Perching Birds in the Collection of the British Museum. Sturnformes. London: Trustees of the British Museum. பக். 368. https://www.biodiversitylibrary.org/page/8328310. 
  4. Check-List of Birds of the World. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. 1968. பக். 368. https://www.biodiversitylibrary.org/page/14481569. 
  5. Olsson, Urban; Alström (2020). "A comprehensive phylogeny and taxonomic evaluation of the waxbills (Aves: Estrildidae)". Molecular Phylogenetics and Evolution 146: 106757. doi:10.1016/j.ympev.2020.106757. 
  6. 6.0 6.1 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2021). "Waxbills, parrotfinches, munias, whydahs, Olive Warbler, accentors, pipits". IOC World Bird List Version 11.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 13 July 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூடிசு&oldid=3683161" இலிருந்து மீள்விக்கப்பட்டது