மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி, சேலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி, சேலம்
கல்லூரி முதன்மை வாயில்
குறிக்கோள்கவனித்தல், சேவை செய்தல், குணப்படுத்துதல்
குறிக்கோள் ஆங்கிலத்தில்கவனம், சேவை, குணமடைதல்
நிறுவப்பட்டது1986
வகைஅரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை
துறை முதல்வர்மரு. வள்ளி சத்தியமூர்த்தி
நிர்வாகம்தமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை
பட்டப்படிப்பு100
பட்ட மேற்படிப்பு69
அமைவுசேலம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
(11°40′18″N 78°04′03″E / 11.671576°N 78.067494°E / 11.671576; 78.067494)
வளாகம்நகரம்
விளையாட்டு விளிப்பெயர்GMKMC
இணைப்புகள்தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி, சேலம் (Mohan Kumaramangalam Medical College - Salem) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மருத்துவக் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.சி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் கீழ் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது 1986 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.[1].

வரலாறு[தொகு]

  • சேலம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக 1913-ல் இங்கிலாந்து அரசாங்கத்தால் கட்டப்பட்டது. ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் மக்கள் மற்றும் பிரித்தானிய அதிகாரிகளின் தேவைக்காக இந்த மருத்துவமனை கட்டப்பட்டது.
  • 13 ஏக்கர் பரப்பளவில் இந்த மருத்துவமனை அமைந்துள்ளது.
  • இந்தியப் பிரதமர் 1988 அக்டோபரில் இராசீவ் காந்தி அவர்களால் இம்மருத்துவக்கலலூரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
  • 1990ஆம் ஆண்டில் வெறும் 65 மாணவர்களுடன் கல்லூரி துவங்கியது.
  • ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்திலிருந்த திருச்செங்கோடு (தற்பொழுது நாமக்கல் மாவட்டம்) குமாரமங்கலம் என்ற ஊரில் பிறந்த மோகன் அவர்களின் நினைவாக மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி,சேலம் என்று பெயரிடப்பட்டது.
  • 2013ஆம் ஆண்டு முதல் இளங்கலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • இக்கல்லூரியின் வெள்ளி விழா 2015 ஆண்டு கொண்டாடப்பட்டது.

விரிவாக்கம்[தொகு]

65 மாணவர்களுக்கான இளநிலை மருத்துவ இடங்களுடன் துவங்கிய கல்லூரி 2013ஆம் ஆண்டு முதல் இந்த இடங்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. [2].

ஆதாரங்கள்[தொகு]