மைனாமதி

ஆள்கூறுகள்: 23°25′34″N 91°08′16″E / 23.4261°N 91.1378°E / 23.4261; 91.1378
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைனாமதி
இராணி மைனாவதியின் அரண்மனை
சல்பான் விகாரம்

மைனாமதி (Mainamati) என்பது 8 ஆம் மற்றும் 12 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட 50 க்கும் மேற்பட்ட பண்டைய பௌத்தக் குடியேற்றங்களைக் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட தாழ்வான, பள்ளமான மலைத்தொடர் ஆகும். இது வங்காளத்தின் பண்டைய திரிபுரா பிரிவின் ஒரு பகுதியாக இருந்தது. இது பங்களாதேஷில் உள்ள கொமிலா மாவட்டத்தின் மையப்பகுதி வழியாக நீண்டுள்ளது. கொமிலா நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 8 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இது இப்பகுதியில் உள்ள மிக முக்கியமான பௌத்தத் தொல்ல்லியல் களங்களில் ஒன்றாகும். கொமிலா இராணுவப்பகுதி அருகில் அமைந்துள்ள இதன் அருகே குடியேற்றவிய கால அழகான கல்லறை ஒன்று உள்ளது.[1] கோவிந்தச்சந்திரனின் தாயார் சந்திர இராணியின் பெயரால் மைனாமதி என்று பெயரிடப்பட்டது. மைனாமதி, டாக்கா நகரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை 1 வழியாக 114  கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிட்டகொங்கிலிருந்து கிட்டத்தட்ட 162 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும், இதன் அருகில் புத்தக் கோவில் ஒன்றும் உள்ளது.

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மைனாமதி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைனாமதி&oldid=3366461" இலிருந்து மீள்விக்கப்பட்டது