மேரி ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேரி ராய் (Mary Roy) என்பவர் இந்தியக் கல்வியாளர் மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார். இவர்இந்திய உச்சநீதிமன்றத்தில் கேரள சிரிய கிறித்தவ சமூகத்தின் பரம்பரை சட்டத்திற்கு எதிராக 1986இல் வழக்கு தொடர்ந்து கிடைத்த வெற்றியின் மூலம் அறியப்படுகிறார். இந்தத் தீர்ப்பு சிரிய கிறித்தவப் பெண்களுக்கு அவர்களின் ஆண் உடன்பிறப்புகளுடன் அவர்களின் மூதாதையர் சொத்தில் சம உரிமைகளை உறுதி செய்தது.[1][2] இதுவரை, சிரிய கிறிஸ்தவ சமூகம் 1916ஆம் ஆண்டு திருவாங்கூர் வாரிசுரிமைச் சட்டம் மற்றும் கொச்சின் வாரிசுரிமைச் சட்டம், 1921 ஆகியவற்றின் விதிகளைப் பின்பற்றியது. ஆனால் இந்தியாவில் மற்ற சமூகங்கள் 1925இன் இந்திய வாரிசுரிமைச் சட்டத்தைப் பின்பற்றி வந்தன.[3]

1916ஆம் ஆண்டின் திருவிதாங்கூர் வாரிசுரிமைச் சட்டம் காரணமாக மேரி ராய்க்கு குடும்பச் சொத்தில் பங்கு மறுக்கப்பட்டது. தந்தையின் மரணத்திற்குப் பிறகு மேரி ராய், தன்னுடைய சகோதரர்கள் மீது வழக்குத் தொடர்ந்தார்.[4] இந்த வழக்கு இந்திய நீதிமன்ற நடைமுறையின் மூலம் இவர் வழக்கில் வெற்றிபெற்றார்.

கேரள மாநிலம், கோட்டய புறப்பகுதியில் கள்ளாத்திபாடியில் உள்ள பள்ளிக்கூடம் பள்ளியின் (முன்னர் கார்பசு கிறித்து உயர் நிலைப் பள்ளி) நிறுவன இயக்குநர் இவராவார். இவரது மகள் மான் புக்கர் பரிசு வென்ற அருந்ததி ராய் ஆவார்.[4]

நீதிமன்ற வழக்கு[தொகு]

1916ஆம் ஆண்டு திருவிதாங்கூர் வாரிசுரிமைச் சட்டம் காரணமாக மேரி ராயின் சிரிய கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சொத்துக்களைப் பெறமுடியவில்லை. இதை எதிர்த்து, மேரி ராய் தனது தந்தை பிவி ஐசக் 1960இல் இறந்த பிறகு, இவரது சகோதரர் ஜார்ஜ் ஐசக் மீது வழக்குத் தொடர்ந்தார். தனது தந்தையின் சொத்தில் சம உரிமை கோரி தன் சகோதரனின் மீது வழக்குத் தொடர்ந்தார். கீழமை நீதிமன்றம் முதலில் அவரது மனுவை நிராகரித்தது. சொத்து இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது - கோட்டயம் சொத்து இரண்டு இடங்களில் உள்ளது. நாட்டகம் கிராம பஞ்சாயத்தில் வேறொரு சொத்து உள்ளது. சிரிய கிறிஸ்தவ பெண்களுக்குச் சம சொத்துரிமைக்காகப் போராடி வெற்றிபெற்ற காரணத்தால் இந்த வழக்கு முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டது.

மேரி ராய் 1994இல் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகி கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தார். இந்த வழக்கில் வெற்றி பெற்ற மேரி ராய், 2000ஆம் ஆண்டில் தாயார் இறந்த பிறகு, இறுதி உத்தரவுக்காக கோட்டயம் துணை நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கு 8 ஆண்டுகள் தொடர்ந்தது, அதன் பிறகு அவர் 2009இல் வழக்கின் தீர்ப்பினை செயல்படுத்த மனுவைத் தாக்கல் செய்தார், இறுதியாக இவர் தனக்கு உரியச் சொத்தைப் பெற்றார்.[5]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

மேரி ராய் ஹரோல்ட் மேக்ஸ்வெல்-லெஃப்ராயின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி பெற்று பூசாவில் இம்பீரியல் நிறுவன பூச்சியியல் வல்லுநரான பி.வி. ஐசக்கின் மகள் ஆவார்.[6] டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த தனிப்பட்ட நேர்காணலில் மேரி தனது வாழ்க்கை குறித்த தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டார். இவர் வழக்கு தொடர்ந்த தன் மூத்த சகோதரர் ஜார்ஜுடன் ஒரு சிக்கலான உறவையும், தன்னுடைய கணவனிடமிருந்து பிரிந்ததையும் குறிப்பிட்டார்.

அருந்ததி ராய் எழுதிய த காட் ஆப் ஸ்மால் திங்ஸ் எனும் நூலில் வரும் அம்மு என்ற கதாபாத்திரம் தாயார் மேரி ராயை அடிப்படையாகக் கொண்டது. மேரி தனது மகள் எழுதிய கதாபாத்திரத்திற்கு மிகவும் ஒத்திருப்பதை உறுதிப்படுத்தினார். இருப்பினும் அவர் ஒருபோதும் புத்தகத்தில் உள்ளதைப் போலப் பிற சாதியினருடன் தொடர்பு கொள்ளவில்லை என நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அருந்ததி தனது தாயிடமிருந்து சுதந்திரமாக, குறிப்பிட்ட காலத்தில் இருவருக்கும் நெருக்கடியான உறவு இருந்ததாகவும் மேலும் விவரிக்கிறார். இருப்பினும், அருந்ததியின் சாதனைகளைப் பற்றிப் பெருமைப்படுவதாகவும், அவர் மான் புக்கர் பரிசை வெல்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. George Iype. "Ammu may have some similarities to me, but she is not Mary Roy". rediff. பார்க்கப்பட்ட நாள் 12 May 2013.
  2. George Jacob (29 May 2006). "Bank seeks possession of property in Mary Roy case". தி இந்து இம் மூலத்தில் இருந்து 31 மே 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060531055244/http://www.hindu.com/2006/05/29/stories/2006052918730100.htm. பார்த்த நாள்: 12 May 2013. 
  3. Jacob, George (2010-10-20). "Final decree in Mary Roy case executed". The Hindu. http://www.thehindu.com/todays-paper/final-decree-in-mary-roy-case-executed/article840061.ece. பார்த்த நாள்: 21 October 2010. 
  4. 4.0 4.1 "മേരി റോയി ജ്യേഷ്ഠനോട് പറഞ്ഞു: 'എടുത്തുകൊള്ളുക'". Mathrubhumi. Archived from the original on 20 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 20 May 2018.
  5. Jacob, George; Jacob, George (2010-10-21). "Final decree in Mary Roy case executed" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/todays-paper/Final-decree-in-Mary-Roy-case-executed/article15786386.ece. 
  6. Roy, Mary (1999). "Three generations of women". Indian Journal of Gender Studies 6 (2): 203–219. doi:10.1177/097152159900600204. பப்மெட்:12322348. 
  7. "There's something about Mary - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/home/sunday-times/Theres-something-about-Mary/articleshow/15871684.cms. 

 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_ராய்&oldid=3440226" இலிருந்து மீள்விக்கப்பட்டது