மெண்டே பத்மநாபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெண்டே பத்மநாபம்
இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர்,
பதவியில்
செப்டம்பர் 13, 1989 – ஏப்ரல் 2, 1994
தொகுதிஆந்திரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1934-04-02)2 ஏப்ரல் 1934
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
துணைவர்உடயாணி பாஸ்கரம்
பிள்ளைகள்5; 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள்

மெண்டே பத்மநாபம் (Mentay Padmanabham) (பிறப்பு 1934) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் ஆந்திரப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] 1957 முதல் 1958 வரை ஆந்திரப் பிரதேச சோசலிசக் கட்சியின் இணைச் செயலாளராகவும் இருந்தார். 1977 மற்றும் 1980 க்கு இடையில் நெருக்கடி நிலைக்குப் பிறகு ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார்.

1999 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளராக பாலகொல்லு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

மரபு[தொகு]

பீமாவரத்தில் உள்ள பீமாவரம் கல்விச் சங்கத்தால் மெண்டே பத்மநாபம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இவரது பெயரில் 2008 இல் நிறுவப்பட்டது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.
  2. "Mentey Padmanabham College of Engineering and Technology - [MPCET], Bhimavaram - Admissions, Contact, Website, Facilities 2021-2022".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெண்டே_பத்மநாபம்&oldid=3824083" இலிருந்து மீள்விக்கப்பட்டது