மூன்றாம் கோபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் கோபாலன்
பாலப் பேரரசு
ஆட்சிக்காலம்940–960
முன்னையவர்ராஜ்யபாலன்
பின்னையவர்இரண்டாம் விக்ரக பாலன்
குழந்தைகளின்
பெயர்கள்
இரண்டாம் விக்ரகபாலன்
அரசமரபுபாலப் பேரரசு
தந்தைராஜ்யபாலன்
தாய்பாக்யாதேவி

மூன்றாம் கோபாலன், (Gopala III ) (ஆட்சி 940 – 960 கி.பி) முன்பு இரண்டாம் கோபாலன் எனவும் அழைக்கப்பட்டார். இந்திய துணைக் கண்டத்தின் வங்காளப் பகுதியில் உள்ள பால மன்னர் ராஜ்யபாலனின் வாரிசாவார். இவர் 20 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் பாலப் பேரரசின் ஒன்பதாவது ஆட்சியாளர் ஆவார். இவருக்குப் பின் இரண்டாம் விக்ரகபாலன் ஆட்சிக்கு வந்தார்.[1]

வாழ்க்கை[தொகு]

கோபாலன் இராட்டிரகூட இளவரசி பாக்யாதேவிக்கும் ராஜ்யபாலனுக்கும் மகனாவார்.[2][3]

மறைந்த அனைத்து பால ஆட்சியாளர்களைப் போலவே இவரும் பலவீனமான ஆட்சியாளராக இருந்தார். கோபாலனின் ஆட்சியின் போது, திரிபுரியின் காலச்சூரிகள் சந்தேலர்கள் பிரதிகாரர்களின் நிலங்களைக் கைப்பற்றினர். காம்போஜ பழங்குடியினரும் வங்காளத்தின் வடக்கில் தங்களை நிலைநிறுத்தி, கோபாலனை தெற்கு பீகார் மற்றும் மேற்கு வங்காளம் வரை துரத்தினார்கள்.. இவருடைய ஆட்சியில் பாலப் பிரதேசம் வெகுவாகக் குறைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_கோபாலன்&oldid=3807061" இலிருந்து மீள்விக்கப்பட்டது