முஹம்மது இஸ்மாயில்
| காயிதே மில்லத் முகம்மது இசுமாயில் சாகிப் | |
![]() |
|
| அரசியல் கட்சி | இந்தியன் யூனியன் முசுலிம்லீக் |
|---|---|
|
|
|
| பிறப்பு | சூன் 5, 1893 திருநெல்வேலி பேட்டை, தமிழ்நாடு |
| இறப்பு | மே 4 1972 (அகவை 75) சென்னை |
| வாழ்க்கைத் துணை |
சமால் கமீதாபீவி |
| பிள்ளைகள் | 1 மகன் - சமால் முகம்மது மியாகான் |
| இருப்பிடம் | சென்னை |
| ஏப்ரல் 4 இன் படியான தகவல், 1972 மூலம்: [1] |
|
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் சனாப் காயிதேமில்லத் முகம்மது இசுமாயில் சாகிப் இந்தியாவின் பெரும் முசுலிம் தலைவர்களுள் ஒருவர். காயிதேமில்லத் என்ற அரபி சொல்லுக்கு மக்களின் வழிகாட்டி என்று பொருள்.
பொருளடக்கம் |
[தொகு] குடும்பம்
திருநெல்வேலி யைச் சார்ந்த ஊராகிய பேட்டையில் 5.6.1896-ல் பிறந்தவர். இவர் மனைவியின் பெயர் சமால் கமீதாபீவி. இவரின் ஒரே மகன் சமால் முகம்மது மியாகான்.
[தொகு] பிரிட்டிசு இந்தியாவில்
தனது பி. ஏ. பொதுத்தேர்வை எழுதாமல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட துவங்கினார். இந்தியாவில் முசுலிம் மக்களுக்காக 1906-ல் நவாப் சலீம் முல்லாகான் "அகில இந்தியன் யூனியன் முசுலிம்லீக் 'கை ஆரம்பித்தார். அவருக்கு பின்னர் முகமது அலி சின்னா, அதனை நடத்தி வந்தார். பாகிசுதான் பிரிவினைக்குப்பின், இதன் தலைவரானார் காயிதேமில்லத். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
[தொகு] சுதந்திர இந்தியாவில்
"இந்தியாதான் எங்கள் தாய் நாடு. இங்கிருந்து நாங்கள் போகமாட்டோம்' என்று அதிக எண்ணிக்கையில் முசுலிம்கள் இங்கே தங்கிவிட்டதால், அவர்களுக்காக கட்சி பெயரில் இருந்த "அகில' என்பதை நீக்கிவிட்டு.. 1949-ல் 'இந்தியன் யூனியன் முசுலிம்லீக் என்று மாற்றினார் காயிதேமில்லத். இதன் முதல் மாநாடே சென்னையில் உள்ள ராசாசி ஆலில் தான் நடந்தது. 1971 ல் பாகிஸ்தான் இந்தியாவோடு போர் தொடுத்தபோது தனது ஒரேமகனை போர்க்களத்திற்கு அனுப்ப தயார் எனக்கூறி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். நெய்வேலியில் எடுக்கப்படும் நிலக்கரியில் மாநில அரசுக்கு உரியபங்கு கோரி பெற்றுத் தந்தவர்.
இந்திய அரசியல் நிர்ணயஅவையில் உறுப்பினராக இருந்து மாநிலங்களுக்கு அதிக ஆட்சியுரிமை வழங்கப் படவில்லையென்றால் அவை “மினுமினுக்கும் நகராட்சி போன்றவைகளே” என்று நயம்பட உரைத்தவர். இந்திய நாட்டு அரசின் தேசிய மொழியாகும் தகுதி தமிழுக்கு மட்டுமே உண்டு என ஓங்கி முழங்கியவர்.
கேரளா மஞ்சேரி மக்களவை தொகுதியிலிருந்து மூன்றுமுறை தொகுதிக்கு சென்று வாக்கு சேகரிக்காமலே வெற்றி பெற்ற மகத்தான தலைவர். அன்றைய சென்னை மாநிலத்தின் சட்டமன்ற பிரதான எதிர்கட்சி தலைவராகவும் சிறப்பாக பணியாற்றினார். 1967ல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை கைப்பற்ற முக்கிய பங்காற்றினார்.
[தொகு] தொழில்துறை
அரசியலில் கவனம் செலுத்தியதோடு, தொழிற்துறையிலும் காயிதெ மில்லத் புகழ் பெற்று விளங்கினார். தோல் பொருட்கள் மற்றும் இறைச்சி ஏற்றுமதி மற்றும் விற்பனையில் கொடிகட்டி பறந்தார். தொழிற்துறையில் புகழ் பெற்றதால் சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், சென்னை வர்த்தகத் துறை, தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில், தொழில் திட்டக்குழு, சுங்கவரிக் கழகம், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை உட்பட ஏராளமான அமைப்புகளில் உறுப்பினராக விளங்கினார்.
சென்னை மாநில மட்டன் விற்பனையாளர்கள் சங்கத் தலைவராக 1946-ம் ஆண்டு முதல் 1972-ம் ஆண்டு வரை இருந்தார். மத்திய தோல் மற்றும் தோல் பொருட்கள் கமிட்டித் தலைவராகவும், தென்னிந்திய தோல் வியாபாரிகள் சங்க துணைத் தலைவராகவும் இருந்தார். தென்னிந்திய இசுலாமிய கழகத்தின் துணைத் தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழ் வளர்ச்சிக் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தார்.
சிறுபான்மையினரின் நலனில் அக்கறை கொண்டவர். தமிழகத்தில் 14 இசுலாமியக் கல்வி நிறுவனங்களை அமைத்தவர். அடக்கமும் ஒழுக்கமும் நிறைந்த நன்னடத்தையால் அனைத்து தரப்பினராலும் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் எனஅன்புடன் அழைக்கப்பட்டார். இவர் 5-4-1972ல் மரணித்தார். இவரின் மகன் சமால் முகம்மது மியாகான் தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றியவர்.
[தொகு] நினைவாக
காயிதே மில்லத்தில் மறைவுக்குப்பின் தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு “காயிதே மில்லத் நாகைப்பட்டினம் மாவட்டம்” என்று பெயர் சூட்டியது.[1] பின்னர் 1996ல் அரசு பேருந்துக் கழகங்கள், மாவட்டங்களிலிருந்து தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டபின்னர் அதன் பெயர் நாகப்பட்டினம் மாவட்டம் என்று மாற்றப்பட்டு விட்டது.[2] 2003ம் ஆண்டு அவர் நினைவாக தமிழக அரசு ஒரு மணிமண்டபத்தை கட்டியுள்ளது.[3] காயிதெ மில்லத்தின் பெயர் தற்போது தமிழகத்தில் பல கல்வி நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டுள்ளது. காயிதே மில்லத் அரசினர் பெண்கள் கல்லூரி, சென்னை மற்றும் காயிதே மில்லத் கலைக் கல்லூரி, மேடவாக்கம், சென்னை ஆகியவை அவற்றுள் சில.[4][5]
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Discussion under Rule 193 Flood situation caused - Parliament of India
- ↑ Name Of The Game Outlook Magazine, 16 July 1997
- ↑ Opening ceremony of "Kanniya Thendral" Quaid-E-Milleth Mohamed Ismayil Manimandapam.
- ↑ About Us:Quaid–E–Millath Government College for Women
- ↑ University of Madras, Aided Colleges

