முள்முருக்கு
| முள் முருக்கை | ||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கொல்கத்தாவில் உள்ள ஒரு முள் முருக்கை மரம்.
|
||||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||||
|
||||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||||
| 1. எரித்ரைனா வேரிகாட்டா 2. எரித்ரைனா இந்திக்கா |
முள் முருக்கை (Erythrina variegata) ஆசியாவினதும், கிழகு ஆபிரிக்காவினதும் வெப்பவலயப் பகுதிகள், வடக்கு ஆஸ்திரேலியா, இந்தியப் பெருங்கடல் தீவுகள், பிஜிக்குக் கிழக்கில் உள்ள பசிபிக் பெருங்கடல் தீவுகள் ஆகியவற்றைச் சேர்ந்த, கிளைகளில் முட்களைக் கொண்ட ஒரு மரம் ஆகும். இதற்கு எரித்ரைனா இண்டிக்கா (Erythrina indica) என்ற மாற்று அறிவியல் பெயரும் உண்டு.
இது 27 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. மூன்று சிற்றிலைகளுடன் கூடிய கூட்டிலை வடிவம் கொண்ட இதன் இலைகளின் காம்பு 20 சமீ வரை நீளம் உள்ளது. ஒவ்வொரு சிற்றிலையும் 15 சமீ நீள, அகலங்களை உடையதாக இருக்கக் கூடும். இதன் செந்நிறப் பூக்கள் அடர்த்தியாகக் காணப்படும். அவரை போன்ற பருப்புக்கனிகள் (pods) 15 ச்மீ வரை நீளமான உருளை வடிவம் கொண்டவை. விதைகள் சிவந்த மண்ணிறத்தில் இருக்கும். இம்மரம் ஒரு அழகூட்டும் தாவரம் என்ற வகையிலும் மதிப்பு உள்ளது. இவ்வினத்தில் பல வேறுபாடுகள் உண்டு. இலை நரம்புகள் மஞ்சள் அல்லது இளம் பச்சை நிறத்தில் உள்ள பார்செல்லி வகை, வெண்ணிறப் பூக்கள் கொண்ட அல்பா வகை என்பன குறிப்பிடத்தக்கவை. இத் தாவரத்தை விதை மூலமாகவோ அல்லது பதியமுறை (Vegitative) மூலமாகவோ வளர்க்க முடியும். கிளைகளை நட்டு வளர்ப்பதே பொதுவாகக் கையாளப்படுவதும் இலகுவானதுமான முறையாகும்.
மேலும் பார்க்க [தொகு]
படிமங்கள் [தொகு]
-
இலைகளும் இளம் பட்டையும்,கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா.
-
கொல்கத்தாவில் உள்ள மரங்கள், மேற்கு வங்காளம், இந்தியா.
-
இலைகளும் பழமும், கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா.
-
அல்பா வகையின் பூக்கள்,கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா.
-
மரத்தின் பட்டை, கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா.
-
பட்டையும் இலைகளும் ,கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா.