முப்புளோரோநைத்திரசோமெத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முப்புளோரோநைத்திரசோமெத்தேன்
Trifluoronitrosomethane
முப்புளோரோநைத்திரசோமெத்தேன்
முப்புளோரோநைத்திரசோமெத்தேன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
முப்புளோரோ(நைத்திரசோ)மெத்தேன்
வேறு பெயர்கள்
முப்புளோரோ-நைத்திரசோமெத்தேன்
முப்புளோரோ-நைத்திரசோ-மெத்தேன்
நைத்திரசோமுப்புளோரோமெத்தேன்
இனங்காட்டிகள்
334-99-6 Y
ChemSpider 60949 Y
EC number 206-383-2
InChI
  • InChI=1S/CF3NO/c2-1(3,4)5-6
    Key: PGOMVYSURVZIIW-UHFFFAOYSA-N
பப்கெம் 67630
பண்புகள்
CF3NO
வாய்ப்பாட்டு எடை 99.01 g·mol−1
தோற்றம் ஆழ்ந்த நீல நிற வளிமம்
ஊதா நிறத் திண்மம்
உருகுநிலை −196.6 °C (−321.9 °F; 76.5 K)
கொதிநிலை −85 °C (−121 °F; 188 K)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

முப்புளோரோநைத்திரசோமெத்தேன் (Trifluoronitrosomethane) CF3NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நச்சு வேதிப்பொருளான இதில் முப்புளோரோமெத்தில் குழுவானது நைட்ரசோ குழுவுடன் சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டிருக்கும். முப்புளோரோநைத்திரசோமெத்தேனின் தனித்துவமான ஆழ்ந்த நீல நிறம் வாயுக்களில் அசாதாரணமான நிறமாகும்.

வரலாறு[தொகு]

முப்புளோரோநைத்திரசோமெத்தேன் முதன் முதலில் 1936 ஆம் ஆண்டு ஓட்டோ ரஃப் மற்றும் மன்ஃபிரெட்டு கீசு ஆகியோரால் போலந்து நாட்டின் உரோக்லா பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்டது. [1] வெள்ளி நைட்ரேட்டு மற்றும் வெள்ளி ஆக்சைடு முன்னிலையில் வெள்ளி சயனைடை புளோரினேற்றம் செய்து அப்போது இதை உருவாக்கினர்.

தயாரிப்பு[தொகு]

சாதாரண அழுத்தத்தில் புற ஊதா ஒளியில் முப்புளோரோ அயோடோமெத்தேனுடன் நைட்ரிக் ஆக்சைடைச் சேர்த்து முப்புளோரோநைத்திரசோமெத்தேன் பெருமளவில் கிட்டத்தட்ட 90 சதவீதம் அளவிற்கு தயாரிக்கமுடியும். இவ்வினைக்கு வினையூக்கியாக சிறிதளவு பாதரசம் தேவைப்படுகிறது. வினையின் விளைவாக அயோடின் ஓர் உடன் விளைபொருளாக உருவாகிறது. [2][3][4]

பண்புகள்[தொகு]

முப்புளோரோநைத்திரசோ
மெத்தேன்

முப்புளோரோநைத்திரசோமெத்தேன் அடர் நீல நிறத்திலான ஒரு வாயுவாகும். [5] புளோரின் பதிலீடுகள் காரணமாக இச்சேர்மம் இயக்க ரீதியாக ஓரளவு நிலைத்தன்மையுடன் இருந்தாலும், மற்ற நைட்ரோசோ சேர்மங்களைப் போலவே முப்புளோரோநைத்திரசோமெத்தேன் பலவீனமான 39.9 கிலோகலோரி/மோல் மட்டுமே C-N பிணைப்பைக் கொண்டுள்ளது. [6]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Otto Ruff; Giese, Manfred (1936). "Das Trifluor-nitroso-methan, CF3.NO (III.)". Ber Dtsch Chem Ges 69 (4): 684–689. doi:10.1002/cber.19360690411. 
  2. Senning, Alexander (1964). "N-, 0-, and S-trihalomethyl compounds". Chemical Reviews 65 (4): 385–412. doi:10.1021/cr60236a001. 
  3. Taylor, C. W.; Brice, T. J.; Wear, R. L. (1962). "The Preparation of Polyfluoronitrosoalkanes from Nitrosyl Polyfluoroacylates". Journal of Organic Chemistry 27 (3): 1064–1066. doi:10.1021/jo01050a523. 
  4. Park, J. D.; Rosser, R. W.; Lacher, J. R. (1962). "Preparation of Perfluoronitrosoalkanes. Reaction of Trifluoroacetic Anhydride with Nitrosyl Chloride". Journal of Organic Chemistry 27 (4): 1642. doi:10.1021/jo01051a519. 
  5. Griffin, C. E.; Haszeldine, R. N. (1960). "279. Perfluoroalkyl derivatives of nitrogen. Part VIII. Trifluoronitrosoethylene and its polymers". Journal of the Chemical Society (Resumed): 1398–1406. doi:10.1039/JR9600001398. 
  6. Luo, Yu-Ran (2007). Comprehensive Handbook of Chemical Bond Energies. Boca Raton, Fl.: CRC Press. p. 406. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-7366-4.

புற இணைப்புகள்[தொகு]