முன்னிற்குஞ்சுரப்பிக்கே உரித்தான முறிதூண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முன்னிற்குஞ்சுரப்பிக்கே உரித்தான முறிதூண்டி (Prostate-specific antigen, PSA), அல்லது காம்மா-விரைப்புரதம் (gamma-seminoprotein) அல்லது கல்லிக்ரீன் (kallikrein-3, KLK3), என்பது மனிதர்களில் KLK3 மரபணுவால் குறியிடப்பட்ட கிளைக்கோபுரதம் நொதியம் ஆகும். பிஎஸ்ஏ கல்லிக்ரீன் தொடர்புடைய புரத நொதி குடும்பத்தைச் சேர்ந்தது; இதனை முன்னிற்கும் சுரப்பியின் புறவணியிழைய உயிரணுக்கள் சுரக்கின்றன. இது விந்து தள்ளலுக்காக உருவாக்கப்படுகிறது; விரையுறையில் விந்து பாய்மத்தை நீர்த்து விந்து இலகுவாக நீந்த உதவுகிறது.[1] மேலும் இது கருப்பைச் சளியை கரைத்து கருப்பைக்குள் விந்து செல்லுவதற்கு வழி செய்வதாகவும் நம்பப்படுகிறது. [2]

நலமுள்ள முன்னிற்குஞ்சுரப்பிகளை உடைய ஆடவர்களின் குருதி நீர்மத்தில் பிஎஸ்ஏ சிறிய அளவில் காணப்படுவதுண்டு. ஆனால் முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் அல்லது பிற முன்னிற்குஞ்சுரப்பி தொடர்பான நோய்களின்போது இது கூடிய அளவில் காணப்படுகிறது.[3]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Balk SP, Ko YJ, Bubley GJ (January 2003). "Biology of prostate-specific antigen". J. Clin. Oncol. 21 (2): 383–91. doi:10.1200/JCO.2003.02.083. பப்மெட்:12525533. 
  2. Hellstrom WJG, தொகுப்பாசிரியர் (1999). "Chapter 8: What is the prostate and what is its function?". American Society of Andrology Handbook. San Francisco: American Society of Andrology. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-891276-02-6 இம் மூலத்தில் இருந்து 2010-01-12 அன்று. பரணிடப்பட்டது.. http://www.andrologysociety.com/resources/handbook/ch.8.asp. பார்த்த நாள்: 2006-09-17. 
  3. . பப்மெட்:7512659. 

வெளி இணைப்புகள்[தொகு]