மீசை ஆலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீசை ஆலா
கோடையில் தென் ஆப்பிரிக்காவில்
குளிர்காலத்தில் மலேசியாவில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
லேரிடே
பேரினம்:
சிலிடோனியசு
இனம்:
சி. கைப்ரிடா
இருசொற் பெயரீடு
சிலிடோனியசு கைப்ரிடா
(பாலாசு, 1811)
துணையினம்
  • சி. கை. கைப்ரிடா(பாலாசு, 1811) (ஐரோவாசியா மீசை ஆலா)
  • சி. கை. டெலாண்டீ(மத்தேயூ, 1912) (ஆப்பிரிக்க மீசை ஆலா)
  • சி. கை. ஜாவனிகசு(கோர்சூபீல்டு, 1821) (ஆஸ்திரலேசியா மீசை ஆலா)
Range of Ch. hybrida     Breeding      Resident      Non-breeding      Vagrant (seasonality uncertain)
வேறு பெயர்கள்
  • சிலிடோனியசு கைப்ரிடசு

மீசை ஆலா (சிலிடோனியசு கைப்ரிடா)(Whiskered tern) என்பது நீள் சிறகு கடற்பறவையின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை ஆலா ஆகும். இதன் பேரினப் பெயரான சிலிடோனியசு தகைவிலானைப் போல என்ற பொருளிலும் சிற்றினப் பெயரான கைப்ரிடா 'கலப்பு இனம்' என்ற பொருளிலும் இடப்பட்டுள்ளன.[2]

உடல் தோற்றம்[தொகு]

மீசை ஆலா புறாவைவிட சற்றுச் சிறியது. இதன் உடல் நீளம் 23 முதல் 25 செமீ (10 இன்ச்) ஆகும். இதன் அலகு கருஞ்சிவப்பு நிறத்தில் (இனப்பெருக்க காலத்தில்), நுனியில் பழுப்பு நிறத்துடன் இருக்கும். குளிர் காலத்தில் அலகு கருப்பாக மாறும். விழித்திரை பழுப்பு நிறமாகவும் இதன் சிறிய கால்கள் இலேசான சிவப்பு நிறத்திலிருக்கும். இது ஒரு ஒல்லியான, நளினமான ஆலா. இனப்பெருக்க காலம் தவிர, சாம்பல் கலந்த வெண்ணிற உடலுடன் காணப்படும். இரண்டாகப் பிளவுபட்ட சாம்பல் நிற வாலினை உடையது. வாலைவிட நீண்டு செல்லும் இறகுகளைக் கொண்டது. கோடையில் இதன் வயிறு கருப்பாக மாறும், தலையும் முழுவதும் கருப்புத் தொப்பி அணிந்ததுபோலக் கருப்பாக காட்சிதரும். அப்போது பனி போன்ற வெண்ணிற கன்னம் தெரிவதால் மீசை ஆலா எனப் பெயர் பெற்றது. குளிர்காலத்தில் தலையில் சிறிய கருப்பு புள்ளி மட்டுமே காணப்படும்.

சிலிடோனியசு கைப்ரிடா கைப்ரிடா

நடத்தை[தொகு]

நீர்ப்பரப்பின் மேல் குறுக்கும் மறுக்குமாக கூட்டமாக பறந்து கொண்டே இருக்கும். திடீரென்று நீர்ப்பரப்பின் மீது தாழப்பறந்து, அலகால் மீனை கொத்தி எடுத்துக் கொண்டு மீண்டும் பழையபடி பறக்கும். சிலசமயம் கடல் ஆலாவைப் போல நீரில் பாய்ந்து மீனைப் பிடிப்பதும் உண்டு. விளை நிலங்களின் மேல் பறந்து புழு பூச்சிகளை பிடிப்பதும் உண்டு. இது மீன், நண்டு, தவளை, தட்டாம் பூச்சி, வெட்டுக்கிளி போன்றவற்றை உணவாக கொள்கிறது.

இவை தென்னிந்தியாவுக்கு வெளியே நீர் நிலைகளில் தாமரைக் கொடிகளிடையே கூட்டமாக சேர்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Chlidonias hybrida". IUCN Red List of Threatened Species 2017: e.T22694764A111750380. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22694764A111750380.en. https://www.iucnredlist.org/species/22694764/111750380. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. பக். 102, 196. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4081-2501-4. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீசை_ஆலா&oldid=3771939" இலிருந்து மீள்விக்கப்பட்டது