மாறன் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாறன்
பிறப்புமணிமாறன்
(1972-06-04)4 சூன் 1972
செங்கல்பட்டு, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு12 மே 2021(2021-05-12) (அகவை 48)
செங்கல்பட்டு, தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியா
பணிநடிகர், [[பாடுதல்}பாடகர்]]
அறியப்படுவதுகில்லி

கில்லி மாறன் (Ghilli Maran) என்றும் அழைக்கப்படும் மாறன் (4 சூன் 1972 - 12 மே 2021) ஒரு இந்திய நடிகரும், பாடகரும் ஆவார். இவர் முதன்மையாக திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம் நத்தம் என்ற ஊரில் நாகம்மாள் --நாகப்பன் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு 2 சகோதரிகளும், 4 சகோதரர்களும் உள்ளனர். இவர் கிளாரா என்பவரை மணந்தார். தம்பதியருக்கு நிவ்யா ஏஞ்சல் என்ற மகள் உள்ளார்.

தொழில்[தொகு]

இவர் 2002 ஆம் ஆண்டு ஏழுமலை திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்து பெரிய திரையில் அறிமுகமானார். பின்னர் இவர் தரணி இயக்கிய கில்லி (2004) படத்தில் கபடி வீரராக நடித்தார்.[1] அது பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. படத்தில் விஜய்யின் நண்பராக நடித்ததற்காக அறியப்பட்டவர். தலைநகரம் படத்தில் ஒரு அடியாளாக மாறனின் நடிப்பு பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது. அதில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருந்தார்.[1] இவர் நடித்த [[சார்பட்டா பரம்பரை], ஆன்டி இன்டியன் போன்ற திரைப்படங்களில் இவரது மரணத்திற்குப் பின் வெளியானது.[2]

கூடுதலாக, இவர் தனது சொந்த ஊரில் கச்சேரிகளில் கானா பாடல்களையும் பாடினார்.[3]

இறப்பு[தொகு]

தான் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கோவிட்-19 காரணமாக சிகிச்சை பெற்று வந்த மாறன்,[4][5] தனது 48ஆவது வயதில் 12 மே 2021 அன்று இறந்தார்.[3]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 The Hindu Net Desk (2021-05-12). "'Ghilli' actor Maran dies of COVID-19" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/ghilli-actor-maran-dies-of-covid-19/article34540766.ece. 
  2. "Tamil actor Maran dies of Covid-19 at 48". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-05-12. பார்க்கப்பட்ட நாள் 2021-05-12.
  3. 3.0 3.1 Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. "Tamil actor Maran passes away from COVID-19 complications". www.zoomtventertainment.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-12.
  5. "Tamil actor Maran passes away due to Covid-19 complications". The Indian Express (in ஆங்கிலம்). 2021-05-12. பார்க்கப்பட்ட நாள் 2021-05-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறன்_(நடிகர்)&oldid=3356677" இலிருந்து மீள்விக்கப்பட்டது